ஊசி குத்துற ரோசி வேணுமா?.. இதுக்கு அந்த பாட்டே பரவாயில்லை.. யாஷிகாவுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா!
சென்னை: சார்ளி சாப்ளின், சார்ளி சாப்ளின் 2 என பிரபுதேவாவை வைத்து காமெடி படங்களை இயக்கி வந்த சக்தி சிதம்பரம் மீண்டும் ஒரு காமெடி படத்தைக் கொடுக்க ரெடியாகி விட்டார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா கோட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், சன்னி லியோன், வேதிகாவுடன் அவர் இணைந்து நடித்த பேட்ட ராப் படம் வெளியானது. இந்நிலையில், வரும் நவம்பர் 22ம் தேதி ஜாலியோ ஜிம்கானா படம் வெளியாகிறது.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் மற்றும் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அந்த படத்தின் முதல் பாடலான "போலீஸ்காரன கட்டிக்கிட்டா" பாடலே ஏகப்பட்ட பஞ்சாயத்தை கிளப்பிய நிலையில், அடுத்த சம்பவத்தை இறக்கியுள்ளனர்.
எல்லாமே டபுள் மீனிங்: "போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்திவச்சு அடிப்பான், டாக்டரை கட்டிக்கிட்டா ஊசியால குத்துவான்னு" இதற்கு முன்பு ஜாலியோ ஜிம்கானா படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி எல்லாமே டபுள் மீனிங் என நெட்டிசன்கள் பங்கமாக அந்த பாடலை ட்ரோல் செய்தனர். ஆனால், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்து விட்டது. சக்தி சிதம்பரமே அந்த பாடலை எழுதவில்லை என்றும் பாடலாசிரியரின் உழைப்பை திருடிவிட்டார் என்றும் சர்ச்சைகள் வெடித்தன.
ஊசி போடும் ரோஸி: இந்நிலையில், 2வது சிங்கிளாக "ஜிஎச்ல ஊசி போடும் பொண்ணு பேரு ரோஸி.. ரோஸி போடும் ஊசி வேணுமா? இல்லை ஊசி போடும் ரோஸி வேணுமா?" என்கிற அற்புத வரிகள் அடங்கிய அடுத்த கில்மா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபுதேவா, யாஷிகா ஆனந்த் உடன் இந்த பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக வெளியான பாடலில் மடோனா செபாஸ்டியன் உடன் நடனமாடியிருந்தார்.
தொடர்ந்து யாஷிகா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பஹீரா படத்தில் யாஷிகா ஆனந்த் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்திருப்பார். இந்நிலையில், மீண்டும் இந்த படத்திலும் பிரபுதேவாவுடன் யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்துள்ளார். இந்த முறை பிரபுதேவாவுடன் அவருக்கு நடனமாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கும் சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்களும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











