3 நிமிஷம் தான் உனக்கு டைம்.. பிரதீப் ரங்கநாதனை அசிங்கப்படுத்திய கயாடு லோஹர்.. ஆஸ்கர் கனவு வேற!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வந்த LIK திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகி வரும் நிலையில், ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. ஏற்கனவே அந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கெளதம் மேனன் உடன் பிரதீப் ரங்கநாதன் ஆட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் ஹேப்பியான நிலையில், அடுத்ததாக கயாடு லோஹர் உடன் ஃபாரீன் லொகேஷனில் உருவாகியுள்ள ட்ரீம் சாங் புரமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஓ மை கடவுளே படம் போல இந்த படமும் வித்தியாசமாகவும் ரகளையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது பாடலுக்கு வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று ஷூட்டிங் பண்ணியிருக்கோம். நாம ஏன் இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்பக் கூடாது என பிரதீப் ரங்கநாதன் கேட்க, அதற்கு அஸ்வத் மாரிமுத்து செய்யும் அலப்பறை நிச்சயம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது கன்ஃபார்ம்.

கடைசியாக கயாடு லோஹர் உனக்கு 3 நிமிஷம் தான் டைம் என பிரதீப் ரங்கநாதனை பார்த்து சொல்வது தான் பகீர் கிளப்பும் விஷயமாக உள்ளது.
டிராகன் செகண்ட் சிங்கிள்: லியோன் ஜேம்ஸ் இசையில் உருவாகி வரும் டிராகன் படத்தின் 2வது சிங்கிள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட நெல்சன் ஸ்டைலில் ஒரு காமெடி புரமோவை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அஸ்வத் மாரிமுத்து அடிக்கும் லூட்டிகள் பாடலை விட பக்காவாக உள்ளது.
ஆஸ்கருக்கு ஏன் அனுப்பக் கூடாது: பிரான்ஸ், வெனீஸ், சுவிட்சர்லாந்து என வெளிநாடுகளுக்கு எல்லாம் வந்து பாடலை படமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், நாம ஏன் இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்பக் கூடாது என பிரதீப் ரங்கநாதன் ஒன்றும் தெரியாத அப்பாவியாக கேட்க, நம்ம படம் அமைதியா பார்த்துட்டு கடைசியா கைதட்டுற படமா? முதல் சீனில் இருந்து சும்மா கதற விடுறோம், ஆடியன்ஸை சும்மா ஃபயராக்குறோம் என ஓவர் பில்டப் கொடுக்க அதையும் அடக்கி வாசிக்க சொல்லிய இடம் சிறப்பு. (கங்குவாவுக்கு விழுந்த அடி வந்தும் போகுமில்லையா)
3 நிமிஷம் தான் டைம்: கயாடு லோஹர் உடன் இணைந்து டூயட் சாங் ட்ரீம் லொகேஷனில் பாட உள்ள நிலையில், ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யப் போறேன் என கிளம்பும் பிரதீப் ரங்கநாதனிடம் உனக்கு 3 நிமிஷம் தான் டைம் அதற்குள் உன் ட்ரீம் சாங்கை முடித்துவிடு என கயாடு லோஹர் சொன்னதை நெட்டிசன்கள் டபுள் மீனிங் வசனமாகவே மாற்றிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











