Pushpa 2 movie: புஷ்பா 2 வைல்ட்ஃபயர்.. ரசிகர்களுக்கு சூப்பர் excitement கொடுத்த கிஸ்ஸிக் பாடல்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.சர்வதேச அளவில் இந்தப் படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு காணப்படும் நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக வியாபாரத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரெயிலர் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் வைல்ட் பயர் நிகழ்வு இன்றைய தினம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அதிகமான ஹிட் நம்பர்களை கொடுத்துள்ள போதிலும் இவரது கேரியர் பெஸ்ட் படமாக புஷ்பா அமைந்தது. புஷ்பான்னா ஃபிளவர்ன்னு நினைச்சியா, ஃபயரு என இவர் நெருப்புத் தெறிக்க பேசிய வசனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய்களை தாண்டி இந்தப் படம் வசூலித்தநிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க இந்தப் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
புஷ்பா 2 படம்: இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியீடும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் படத்தின் வைல்ட்ஃபயர் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
கிஸ்ஸிக் பாடல் ரிலீஸ்: நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். கலர்ஃபுல் கலாட்டாவாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் கிஸ்ஸிக் பாடல் திரையிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தா இணைந்து ஆட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுன் -ஸ்ரீலீலா இணைந்து ஆட்டம் போட்டுள்ள கிஸ்ஸிக் பாடல் மிகச்சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பாடல்தான் தற்போது இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
வைப் செய்த ரசிகர்கள்: இந்தப் பாடல் தமிழிலேயே ஒளிபரப்பப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகுந்த கரகோஷத்துடன் பாடலை ரசித்து பார்த்தனர். தொடர்ந்து ராஷ்மிகா, ஸ்ரீலீலா உள்ளிட்டவர்களும் இந்தப் பாடலுக்காக அமர்ந்த நிலையிலேயே ஆட்டம் போட்டனர். பாடல் நிறைவடைந்த நிலையில, ராஷ்மிகாவும் ஸ்ரீலீலாவும் பாடல் குறித்து அதிகமாக பேசிக் கொண்டனர். இடையில் இருந்த அல்லு அர்ஜுனையும் கண்டுக் கொள்ளாமல் இவர்களது பேச்சு தொடர்ந்தது.


Click it and Unblock the Notifications











