புதியதோர் உலகம் செய்வோம் .. நடிகர்களாக அவதாரம் எடுக்கும் "சூப்பர் சிங்கர்" ஆஜித், யாழினி, அல்கேட்ஸ்!
விஜய்டிவியின் சூப்பர் சிங்கரில் பாடிய ஆஜித், அனு, யாழினி ஆகியோர் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளனர்.
புதியதோர் உலகம் செய்வோம்' என்று பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் சூப்பர் சிங்கரில் பாடிய பிரவீன் இசையமைத்துள்ளார்
'புதியதோர் உலகம் செய்வோம்'. நாட்டில் புரையோடிக்கிடக்கும் சில விஷயங்கள் தங்கள் வீட்டிலே நடப்பது கண்டு கொந்தளிக்கும் குழந்தைகள், அவற்றை மாற்ற முயற்சிப்பதுதான் கதையின் கரு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா தியேட்டரில் நடைபெற்றது.

தேவயானி
நடிகை தேவயானி குத்துவிளக்கேற்றி பாடல் வெளியீட்டு விழாவை தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய அவர், ஊடகங்கள் இந்தப் படத்தினை பிரபலப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர்கள் வாழ்த்து
நடிகர் ஜெயம்ரவி, நடிகர் சின்னிஜெயந்த், நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.

குழந்தைகள் படம்
குழந்தைகள் நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தினார் சின்னிஜெயந்த்.

பார்க்கவேண்டிய படம்
புதியதோர் உலகம் செய்வோம் திரைப்படத்தை தவிர்க்காமல் ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார் ஜெயம் ரவி.

சாதனை நாயகர்கள்
புதியதோர் உலகம் செய்வோம் படத்தில் நடித்துள்ள அனைவரையும் வாழ்த்திய டி. ராஜேந்தர், தான் போட்ட தாளம்தான் சோறு போட்டது என்றார். பாடல் வெளியிட்டு விழாவில் பல்வேறு குரல்களில் பேசி அசத்தினார் டி.ராஜேந்தர்.

அல்கேட்ஸ் தாத்தா – இமான் அண்ணாச்சி
இந்த திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித், அனு, யாழினி, பிரவின், 'அல்கேட்ஸ்' அழகேசன், சந்தோஷ் பாலாஜி, நாராயணன், சூர்யேஸ்வர், சந்தியா, பரத் கல்யாண் இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி , நடித்திருக்கிறார்.

தொழில் நுட்பக்கலைஞர்கள்
இத்திரைப்படத்தை கே.எஸ்.நாகராஜன்ராஜா வழங்க, பி.நித்தியானந்தம் டி.எப்.டி. இயக்குகிறார். பிரவீன் சைவி இசையமைக்கிறார். பாலாஜி ரங்கா - விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, உதயசங்கர் டி.எப்.டி. படத்தொகுப்பு செய்கிறார்.

விரைவில் வெளியீடு
ஸ்ரீதேஜு பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ஜெயகுமார், திருமதி கே.என். சூரியகலா தயாரித்துள்ள புதியதோர் உலகம் செய்வோம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











