ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செட்டில்.. பழைய பாடலை ரீமிக்ஸ் செய்த ராகவா லாரன்ஸ்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செட்டில் பழைய பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்.

Recommended Video

Raghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்ட நடிகர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர்.

முன்னணி நடிகராக வலம் வரும் லாரன்ஸ் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா சீரிஸ் படங்கள் வேற லெவல் ஹிட் கொடுத்தன.

மூன்று படங்கள் கைவசம்

மூன்று படங்கள் கைவசம்

ராகவா லாரன்ஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் பிரபலமானவர். கடைசியாக அவரது நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.

ரஜினி கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ்

ரஜினி கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ்

மேலும் பி வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காதாப்பாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இதற்கான நாயகிகள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது.

பழை பாடல் ரீமிக்ஸ்

பழை பாடல் ரீமிக்ஸ்

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
இப்படத்தில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'பாடாத பாட்டெல்லாம்' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் செட்

ஒரு கோடி ரூபாய் செலவில் செட்

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். "ருத்ரன்" படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துர்கா படத்தில் டபுள் ஆக்ஷன்

துர்கா படத்தில் டபுள் ஆக்ஷன்

இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துர்கா படத்தில் லாரன்ஸ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X