ரஜினி ஆசியுடன் முன்னாள் உதவியாளர் தயாரிக்கும் படத்தின் இசை வெளியீடு!

By Shankar

கிருமி பட இசைவெளியீட்டு செய்திக்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...

ரஜினியின் முன்னாள் உதவியாளர் ஜெயராமனைத் (ரஜினி ஜெயராமன்) தெரியாதவர்கள் தமிழ் சினிமாவிலும் பத்திரிகை உலகிலும் ரசிகர் மத்தியிலும் யாரும் இருக்க முடியாது. அந்த அளவு ரஜினியிடம் செல்வாக்குடன் திகழ்ந்தவர்.

குறிப்பாக தொன்னூறுகளின் மத்தியில், இவரைத் தாண்டி ரஜினியைப் பார்ப்பது குதிரைக் கொம்பு.

ஆனால் ஒரு கட்டத்தில் இவரை ரஜினியே வெளியேற்ற வேண்டிய சூழலை உருவாக்கிக் கொண்டார் ஜெயராமன். தவறு தன் பக்கம்தான் என்பது தெரிந்ததால் அமைதியாக ஒதுங்கினார்.

ஆண்டுகள் ஓடின. திடீரென ரஜினியிடமிருந்து அழைப்பு. தனது பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் ரஜினி தன் சொந்த நிலத்தை பிரித்து எழுதி, அதில் பல லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுத்தார். அதில் ஒரு வீட்டை இதே ஜெயராமனுக்கு எழுதிக் கொடுத்தபோது, திக்குமுக்காடிப் போய் நின்றார் ஜெயராமன்.

இப்போது தயாரிப்பாளராக...

இப்போது தயாரிப்பாளராக...

அதே ஜெயராமன்தான் இப்போது ஒரு படம் தயாரித்துள்ளார். படத்துக்கு தலைப்பு கிருமி.

இந்தப் படத்தைத் தொடங்கும் முன் போயஸ் தோட்டத்துக்குப் போய் ரஜினியிடம் விஷயத்தைச் சொன்னாராம். படம், கதை குறித்தெல்லாம் கேட்ட ரஜினி, மனசார வாழ்த்தி அனுப்பினாராம்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்தப் படத்துக்குத்தான் இன்று இசை வெளியீட்டு விழா.

எஸ்.பி.முத்துராமன், கலைப்புலி எஸ்.தாணு, நக்கீரன் கோபால், விஜய் சேதுபதி, தேனப்பன், பைவ் ஸ்டார் கதிரேசன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன், சார்லி, நாயகன் கதீர், நாயகி ரேஷ்மி மேனன், இசையமப்பாளர் கே, இயக்குனர் அனுசரன், கானா பாலா உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டில் கலந்துக் கொண்டனர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இப்படத்தின் இசையை எஸ்.பி.முத்துராமன் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். அதன்பின் படத்தை பற்றி விஜய் சேதுபதி பேசும்போது, ‘கிருமி' படத்தை நான் பார்த்துவிட்டேன். இப்படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைந்திருக்கிறது. காட்சிகள் அனைத்தையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். கதிர் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படம் எல்லாருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்றார்.

எஸ்பி முத்துராமன்

எஸ்பி முத்துராமன்

எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, "நான் ரஜினியை வைத்து பல படங்கள் இயக்கியிருக்கிறேன். ரஜினியின் உதவியாளரான ரஜினி ஜெயராமனை பல வருடங்களாக தெரியும். உதவியாளராக இருந்து தற்போது தயாரிப்பாளராக வளர்ந்திருப்பது சந்தோஷமளிக்கிறது. இவருடன் சேர்த்து ரஜினிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

மேலும் விழாவிற்கு வந்த அனைவரும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறினர்.

கதிர் - ரேஷ்மி

கதிர் - ரேஷ்மி

‘மதயானை கூட்டம்' படத்தில் நடித்த கதிர்தான் படத்தின் நாயகன். நாயகியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சார்லி, வனிதா தென்னவன், யோகிபாபு, டேவிட் சாலமன், தீனா, மகேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை ஜே.பி.பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X