Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ரஜினியின் காலா படத்தின் "செம்ம வெயிட்டு" பாடல் இணையத்தில் வெளியீடு
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள காலா கரிகாலன் படத்தின் செம்ம வெயிட்டு பாடல் யுடியூபில் இன்று வெளியானது.
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள காலா கரிகாலன் படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலை அதன் தயாரிப்பாளர் தனுஷ் இன்று வெளியிட்டார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா கரிகாலன் என்ற படத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாக இருந்தது.
எனினும் இதன் வெளியீடு தற்போது ஜூன் மாதத்துக்கு தள்ளி போனது. வரும் மே 9-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் மே தினத்தையொட்டி செம்ம வெயிட்டு பாடலின் சிங்கிள் டிராக் மட்டும் வெளியானது.
இந்த பாடலை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் யூடியூப்பில் வெளியிட்டார். ரஜினியின் காலா திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நெல்லையில் இருந்து மும்பைக்கு இடம்பெறும் குடும்பத்தில் நடைபெறும் கதை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் சில டீஸர் காட்சிகள் வெளியாகின. அதில் கியாரே செட்டிங்கா, வேங்கையன் மவன் ஒத்தைல நிக்க, தில்லிருந்தா மொத்தமா வாங்கலே என்று ரஜினிகாந்த் பேசும் வசனம் பிரபலமானது.