தரமணி படத்தின் பாடல்களை வெளியிட்டார் ரஜினிகாந்த்!
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தரமணி படத்தின் இசை மற்றும் பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தேசிய விருது பெற்ற தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ரிலீஸ் தள்ளிக் கொண்டே போகும் இந்தப் படத்தின் பாடல்களை இன்று ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ராம், தயாரிப்பாளர்கள் ஜே சதீஷ்குமார், ஆல்பர்ட், நாயகன் வசந்த் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











