twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''என்ன தவம் செய்தேனோ''… இசையில் மனதை மயக்கும் ராஜ்குமார்

    By Mayura Akilan
    |

    இசையை சிலர் ரசிப்பார்கள்... சிலர் அனுபவிப்பார்கள். சிலர் இசையே வாழ்க்கை என்று வாழ்வார்கள். அவர்களின் ஒருவர் தான் ராஜ்குமார் ராஜமாணிக்கம்.

    இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு... சிறுவயதில் இருந்தே கண்ணனைப் போல புதுச்சேரியின் கடற்கரைப் பகுதிகளில் புல்லாங்குழலும் கையுமாய் சுற்றித்திரிந்தவர். பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் தன்னுடைய கனவின் முதல் படியை தொட்டிருக்கிறார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரின் சின்னச் சின்ன பங்களிப்பு இன்றைக்கு சன் டிவியின் பாசமலர் தொடரின் பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு மாலைப் பொழுதில் இசை பற்றிய தன்னுடைய ஆர்வத்தினை, இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற தனது கனவை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் ராஜ்குமார்.

    இசையோடு என் வாழ்க்கை

    இசையோடு என் வாழ்க்கை

    கேள்வி: இசை மீதான ஆர்வம் எப்படி வந்தது?

    ராஜ்குமார்: பெற்றோர் இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றவர்கள். வீட்டில் நடனப்பள்ளி நடத்துகிறோம். சிறுவயதில் இருந்த போதே இசை என்னுள் ஊறிப்போனது. அப்பாதான் என்னுடைய முதல் குரு கலைமாமணி ராஜமாணிக்கம் அவரிடம்தான் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன்.

    பரிசாக கிடைத்த புல்லாங்குழல்

    பரிசாக கிடைத்த புல்லாங்குழல்

    கேள்வி: புல்லாங்குழல் மீதான ஆர்வம் எப்படி?

    ராஜ்குமார்: அப்பா வெளிநாடுகளில் எல்லாம் இசைக்கச்சேரி நடத்தியிருக்கிறார். வெளிநாட்டினர் எங்களின் வீட்டிற்கு அதிகம் வருவார்கள். அப்படி வந்தவர்களின் ஒருவர் நம்முடைய புல்லாங்குழலைப் போல வெளிநாட்டில் ரெகார்டர் என்று சொல்வார்கள் அதை எனக்கு பரிசளித்தார். அதை பழகிய போது நம்முடைய புல்லாங்குழலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

    எத்தனையே இசைக்கருவிகள் இருந்தாலும் புல்லாங்குழலின் கானம் கேட்க கேட்க மனதை மயக்கக்கூடியது. அதை நான் வாசிக்கும் போது என்னையே நான் மறந்துவிடுகிறேன். எனக்குள் யாரோ அமர்ந்து வாசிக்கிறார்கள் என்பதாகவே உணர்கிறேன். இதை கேட்பவர்கள் நிறையபேர் கூறியிருக்கின்றனர்.

    இசையமைப்பாளர் ஆவது என் கனவு

    இசையமைப்பாளர் ஆவது என் கனவு

    கேள்வி: எதிர்காலத் திட்டம் என்ன?

    ராஜ்குமார்: நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். இசையமைப்பாளர் ஆவதுதான் என்னுடைய கனவு. அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். முதற்கட்டமாக ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளின் புரோமோக்களுக்கு இசை அமைத்து கொடுத்துள்ளேன். சன் தொலைக்காட்சியில் பாசமலர் சீரியல் ஒன்றின் பாடலுக்கு இசை அமைத்துள்ளேன்.

    என்ன தவம் செய்தேனோ….

    கேள்வி: சீரியல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    ராஜ்குமார்: இயக்குநர் அழகர் அவர்களின் மனைவி பிரசன்னா, ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். அவர் மூலமாக எனக்கு அழகர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. பாசமலர் தொடரில் என்னதவம் செய்தோனோ என்ற பாடலை நானே இசையமைத்து பாடியிருக்கிறேன்.

    புல்லாங்குழலின் கானம்

    புல்லாங்குழலின் கானம்

    கேள்வி: புல்லாங்குழல் தவிர இசையில் பிரத்யேகமாக ஏதாவது படித்திருக்கிறீர்களா?

    ராஜ்குமார்: கேள்வி ஞானத்தின் மூலம்தான் புல்லாங்குழலைக் கற்றுக்கொண்டேன். என்னுடைய இசையில் அதிகம் புல்லாங்குழலை பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனாலும் புல்லாங்குழல் தவிர பியானோ, சவுண்ட் எஞ்ஜினீயரிங் படித்திருக்கிறேன். தனியாக ரொகார்டிங் தியேட்டர் வைத்து குறும்படங்கள், ஆல்பங்களுக்கு இசையமைத்து தருகிறேன்.

    பெற்றோர்...

    பெற்றோர்...

    கேள்வி: உங்களின் இசை ஆர்வத்திற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு எப்படி?

    ராஜ்குமார்: என் இசை ஆர்வத்திற்கு தூண்டுகோலாய் இருந்தவர்கள் என் பெற்றோர்கள்தான். என்னுடைய தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்றனர். இசை மீதான என்னுடைய கனவுகள் நிறைவேற முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

    அனைத்து வகையான இசையும்

    கேள்வி: தொலைக்காட்சி சீரியல் பாடலிலும் புல்லாங்குழலையே அதிகம் பயன்படுத்தியிருக்கிறீர்கள். மென்மையான இசை மட்டும்தான் உங்களிடம் இருந்து கிடைக்குமா?

    ராஜ்குமார்: அடிப்படையில் நான் மிகவும் அமைதியானவன். அதற்காக நான் மெலடி பாடல் மட்டும்தான் இசையமைப்பேன் என்று கூறமாட்டேன். அனைத்து வகையான இசையும் என்னிடம் இருந்து கிடைக்கும். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இசையைத் தருவேன்.

    ராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும்

    ராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும்

    கேள்வி: நீங்கள் யாரை ரோல்மாடலாக நினைக்கிறீர்கள்?

    ராஜ்குமார்: ஏ.ஆர். ரகுமான் சார் என்னுடைய இன்ஸ்பிரேசன். எனக்குள் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது இளையராஜாசார். இருவருமே என்னுடைய ரோல்மாடல்கள்தான்.

    கனவுகள் மெய்ப்பட

    கனவுகள் மெய்ப்பட

    தன்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் நம்பிக்கையை நனைத்து பேசும் ராஜ்குமாரின் தங்கை ரஞ்சனியும் இசை பயின்றவரே. மிகச் சிறந்த பாடகியும் கூட.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    மக்கள் மனம் கவரும் முன்னணி இசையமைப்பாளராக ராஜ்குமார், வளர்ச்சியடைய, ஒன்இந்தியாவின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    English summary
    Rajkumar is a budding music star in TV and he is doing the music work for Pasamalar serial.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X