2.0 இசை வெளியீடு: ஷங்கர் தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா?- ரசிகர்கள் குழப்பம்
Recommended Video

சென்னை: 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க தெலுங்கு நடிகர் ராணா, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் துபாய் சென்றுள்ளனர்.
2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று துபாயில் பிரமாண்டமாக நடக்கிறது. 2.0 நிகழ்ச்சியால் துபாயில் வசிக்கும் தமிழர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நேற்று நடந்த பிரஸ் மீட்டை பார்த்தே திரையுலகம் அசந்துவிட்டது.

ஹெலிகாப்டர்
ஹோட்டலில் இருந்து பிரஸ் மீட் நடந்த இடத்திற்கு 2.0 குழுவினர் ஹெலிகாப்டரில் பறந்து வந்ததே ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது. பிரஸ் மீட்டே இப்படின்னா படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் வியக்கின்றனர்.

கரண்
2.0 இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க நடிகர் ராணா, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் ஆகியோர் துபாய் சென்றுள்ளனர். படங்களில் பிசியாக இருந்தாலும் ராணா ரஜினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ரஜினி
2.0 இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே. பாலாஜியும் தொகுத்து வழங்க உள்ளார். ரஜினிக்கு வயசாகிவிட்டது அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று சொன்னவரை எதற்கு 2.0 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைத்திருக்கிறார்கள் என்று தலைவர் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

ஷங்கர்
ஆர்.ஜே. பாலாஜி ரஜினியை பற்றி பேசியது ஷங்கருக்கு தெரியாமலா இருந்திருக்கும். அதனால் இன்றைய நிகழ்ச்சியில் ராணா, கரணை மெயினாகவிட்டு பாலாஜியை ஒப்புக்குசப்பாக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்
நல்லா நடிகர் நீங்க.தலைவர் விழாவிற்கு போக மனசு கூசலயா?பாலஜி சார்😡🤔 நீங்க பெசனது மறக்க முடியல்ல 😔இருந்தாலும் வாழ்த்துக்கள்💐#2Point0MusicLaunch என்று பாலாஜி போட்ட ட்வீட்டை பார்த்து ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











