ரடடபட்டா... பட்டையை கிளப்பும் அரண்மனை 3 ஃபஸ்ட் சிங்கிள் வெளியீடு

சென்னை : டைரக்டர் சுந்தர்.சி எழுதி, இயக்கி வரும் படம் அரண்மனை 3. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகமாக வெளியாக உள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல், கோகுலாஷ்டமியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

ஆர்யா, ராஷி கன்னா, ஆண்டிரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, கோவை சரளா, மனோபாலா, சுந்தர்.சி, சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவினி சினிமேக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

மாற்றப்பட்ட சன் பிக்சர்ஸ்

மாற்றப்பட்ட சன் பிக்சர்ஸ்

2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் அரண்மனை 3 படத்தை எடுக்க போவதாக சுந்தர்.சி அறிவித்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க போவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவினி சினிமேக்ஸ், அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களைப் போல் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக சுந்தர்.சி அறிவித்தார்.

நடிக்க மறுத்த ஹன்சிகா

நடிக்க மறுத்த ஹன்சிகா

மூன்று ஹீரோயின்கள் கொண்ட கதையாக இதை இயக்க நினைத்த சுந்தர்.சி, முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த ஹன்சிகாவை இந்த படத்திலும் நடிப்பதற்காக கேட்டுள்ளார். ஆனால் தான் மற்ற படங்களில் நடிப்பதால் தேதி ஒத்து வராத காரணத்தால் இதில் நடிக்க ஹன்சிகா மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து ராஷி கன்னா, ஆண்டிரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோரை 3 நாயகிகளாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷங்கர் மகாதேவனும், ஹரிஹரனும் நடித்துள்ளனராம்.

குஜராத் அரண்மனையில் ஷுட்டிங்

குஜராத் அரண்மனையில் ஷுட்டிங்

2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் அரண்மனையில் ஷுட்டிங் துவங்கப்பட்டது. மார்ச் மாதம் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் நவம்பரில் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. சுமார் 2 கோடி செலவில் செட் அமைக்கப்பட்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 16 நாட்களில் 200 பேக்கிரவுண்ட் பணியாளர்களைக் கொண்டு க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டுள்ளது.

6 மாத கிராஃபிக்ஸ் பணி

6 மாத கிராஃபிக்ஸ் பணி

இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு, பிப்ரவரியில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டது. மார்ச் மாதமே படத்தின் மொத்த பணிகளும் முடிந்து விட்டது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் மட்டும் 6 மாதம் நடைபெற்றுள்ளது.

Recommended Video

INDIAN 2 படத்தில் இருந்து Vivekh காட்சிகள் நீக்கமா? | Aranmanai 3, Vijaysethupathi
தள்ளி போகும் ரிலீஸ்

தள்ளி போகும் ரிலீஸ்

இந்த ஆண்டு மே மாதமே, ரம்ஜானை முன்னிட்டு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது.

ரடடபட்டா பாடல்

ரடடபட்டா பாடல்

இந்நிலையில் அரண்மனை 3 படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரடடபட்டா...அரண்மனைக்குள்ள யாரு என துவங்கும் பாடல் இன்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை என்ஜாய் பாடல் புகழ் அறிவு, தானே எழுதி, பாடியுள்ளார். இந்த படத்தின் இசை உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X