Real Thug: நீ என் பாட்டை கட் பண்றியா.. மணிரத்னத்துக்கே ‘தக் லைஃப்’ சம்பவம் பண்ண ஏ.ஆர். ரஹ்மான்!

சென்னை: 'தக் லைஃப்' எமோஜிக்கு தமிழ் சினிமாவில் சரியான அளவு எடுத்த செய்த ஒரு நபர் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மான் தான். திருக்குறள் போல ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பவர்ஃபுல் பஞ்சுகளை ரஜினிகாந்தை விட பக்காவாக பல இடங்களில் பேசி ரசிகர்களை மட்டுமின்றி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு ஆரம்பத்தில் இசை ஆல்பங்களில் சுற்றிக் கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் திடீரென ஹேர் ஸ்டைலை ஒட்டுமொத்தமாக மாற்றியது ஏன் என்கிற கேள்விக்கு என்னோட மனைவி பக்கத்துல படுக்க மாட்டாங்க என பேசி 'தக் லைஃப்' பதில் கொடுத்து மெர்சல் ஆக்கினார்.

Real Thug AR Rahman Thug Life moments in Tamil Cinema and recent one to Maniratnam
Photo Credit:

தமிழ் மொழி குறித்தும், இந்திய சினிமா குறித்தும் ஒரே ஒரு வார்த்தையில் நச்சென பதில் கொடுத்து எப்போதும் விட்டுக் கொடுக்காமல், மற்றவர்களின் மூக்கையும் உடைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஆஸ்கருக்கு பிறகு என்ன மாற்றம்: ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இப்போ இருக்குற ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம் என சிவகார்த்திகேயன் ஒரு முறை விருது விழாவில் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்க, "வயது அதிகமாகிடுச்சு அதுதான் வித்தியாசம்" என பதில் அளித்திருந்தார். அதே போல, முன்பெல்லாம் பாடல்களில் வரிகள் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், தற்போது இசை தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்கிற கேள்விக்கு விடை அளித்த ஏ.ஆர். ரஹ்மான், "நல்ல சவுண்ட் சிஸ்டம் வாங்கி கேளுங்க.. பாடல் வரிகள் எல்லாம் நல்லா கேட்கும்" என்றார்.

பாடல்களை 'கட்' செய்யும் மணிரத்னம்: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் தான் முதன்முதலில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகமானார். அன்று முதல் இந்த வாரம் வெளியான தக் லைஃப் படம் வரை பல படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். உயிரே படத்தில் "பூங்காற்றிலே உன் சுவாசத்தில்" பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டென ரேடியோவை மனிஷா கொய்ராலாவை வைத்து ஆஃப் செய்ய வைத்து பாடலை கட் செய்திருப்பார் மணிரத்னம். அதே போல, பல படங்களில் ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து நல்ல நல்ல பாடல்களாக வாங்கி அதை முழுமையாக படத்தில் பயன்படுத்தாமல், கட் செய்து வருகிறார். தக் லைஃப் திரைப்படத்தில், பாடகி தீ வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என "முத்த மழை" பாடலை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கி கொடுத்த நிலையில், அந்த பாடலையே படத்தில் இருந்து மொத்தமாக தூக்கி விட்டார்.

Real Thug AR Rahman Thug Life moments in Tamil Cinema and recent one to Maniratnam
Photo Credit:

ஏ.ஆர். ரஹ்மானின் தக் லைஃப்: நீ என் பாட்டை கட் பண்றியான்னு கடுப்பாகாமல் ஏ.ஆர். ரஹ்மான் 5 அல்லது 6 பாடல்களை கொடுக்காமல், தக் லைஃப் படத்துக்கு மொத்தம் 8 பாடல்கள் மற்றும் 2 இன்னொரு வெர்ஷன் பாடல்கள் என 10 பாடல்களை போட்டுத் தாக்கி எப்படி வேண்டுமானால் பாடல்களை கட் செய்து கொள்ளுங்கள். ஆனால், படம் முழுக்க என்னுடைய பாடல்கள் நிறைந்திருக்கும் என்றும் பேசப்படும் என்றும் செய்த தக் லைஃப் சம்பவம் தான் செம ஹைலைட்.

தக் லைஃப் படத்தில் 10 பாடல்கள்: ஜிங்குச்சா, சுகர் பேபி, முத்த மழை (2 வெர்ஷன்கள்), விண்வெளி நாயகா, அஞ்சு வண்ணப்பூவே (2 வெர்ஷன்கள்), ஓ மாறா, எங்கேயோ, லெட்ஸ் பிளே என மொத்தம் 8 பாடல்கள் மற்றும் 2 ரிப்ரைஸ் வெர்ஷன்கள் என 10 பாடல்களை கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X