ரியோ & பவித்ரா லட்சுமி இணையும் புதிய ஆல்பம் பாடல்... இன்று வெளியாகிறது டீசர் !
சென்னை : ரியோ மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும் ஆல்பம் ஒன்றில் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் ஃபர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இதன் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சாம் விஷால் பாடியுள்ளார்.

ரியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ரியோ. இதையடுத்து சன் மியூசிக்கில் சுமார் 3 வருடம் தொகுப்பாளராக இருந்து சுடசுட சென்னை , கல்லூரி காலம், காபி டீ ஏரியா என வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ரியோ 3வது இடம்
மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்த ரியோ, பிரபலமான தொடரான சரவணன் மீனாட்சியில் 3வது கதாநாயகனாக நடித்தார். பின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தார்.

பவித்ரா லட்சுமி
அதேபோல, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் தற்போது காமெடி நடிகர் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
Recommended Video

ஆல்பம்
இந்நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சியால் பிரபலமான ரியோ மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும் இணைந்து ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளனர். இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கண்ணம்மா என்னம்மா என்று தொடங்கும் இந்த பாடலில் ரியோ ராஜ், பவித்ரா கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மாலை 6 மணிக்கு டீசர்
மேலும், இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சாம் விஷால் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த ஆல்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











