twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரோஜா' முதல் 'மெர்சல்' வரை - ஏ.ஆர்.ரஹ்மான் 25 #25YearsOfRahmanism

    By Vignesh Selvaraj
    |

    தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதலே இசைக்கும் அதற்குமான பந்தம் யாழும் நரம்பும் போலானது. ஒவ்வொரு காலகட்டங்களின் ரசனைகளுக்கும் ஏற்றாற்போல நமது தமிழ் சினிமாவிலும் இசையின் வடிவம் மாற்றமடைந்து கொண்டே வந்துள்ளது.

    தியாகராஜ பாகவதர் காலத்து சங்கீதத்தைத் தனது மெல்லிசையால் ஓவர்டேக் செய்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அதற்கடுத்த காலகட்டத்தில் இளையராஜாவின் ஆர்மோனியம் ரசிகர்களின் செவிகளில் இசைத்தேன் ஊற்றியது. ராஜாவின் இசையில் சொக்கிப் போயிருந்த தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் புதுப் புயலாய் சுழன்றடிக்கத் திரையிசைக்குள் புகுந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    அடுத்த தலைமுறை இசை :

    அடுத்த தலைமுறை இசை :

    1992-ம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம்தான் திரையிசைக்கு அறிமுகமானார் ரஹ்மான். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே ரசிகர்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுத்தன. இசைக்கான அடுத்த தலைமுறை தொடங்கிவிட்டதாக எண்ணவைத்தன. 'ரோஜா' படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் இசையின் புதுமையாகத்தான் இருக்கிறார் ரஹ்மான்.

    மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் :

    மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் :

    'சின்னச் சின்ன ஆசை' எனச் சிறகடிக்கத் தொடங்கியவர் இப்போது அமைக்காத இசை இல்லை... பாடாத மொழி இல்லை. தனது துள்ளல் இசையால் இசைப் பிரியர்களின் மனதைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். 'மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்' என உலகப் புகழ் பெற்றதும் அல்லாமல் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் கையில் தாங்கி கௌரவம் பெற்றிருக்கிறார்.

    எல்லைகள் இல்லை :

    எல்லைகள் இல்லை :

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், மாண்டரின் என இசை அலைவுறும் தூரமும் பரந்துவிரிந்துகொண்டே செல்கிறது. நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து கடல்தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கிறது ரஹ்மானின் இசை. இனம், மொழி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அசரடிக்கிறது அவரது இசை.

    திறமைக்கான தேடல் :

    திறமைக்கான தேடல் :

    ஒவ்வொரு வருடமும் குறைவான படங்களுக்கு மட்டுமே இசையமைத்தாலும், அத்தனையிலும் அவரது தனித்துவங்கள் தெறித்தன. புதிய பாடலாசிரியர்கள், புதிய பாடகர்கள், புதிய இசைக்கலைஞர்கள் எனத் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறார்.

    இயல்பும் இசையும் :

    இயல்பும் இசையும் :

    உண்மையில், ரஹ்மான் எதிரிலிருப்பவருக்குக் கூட லேசாகக் கேட்கும் அளவுக்கு மெதுவாகப் பேசக் கூடியவர். ஆனால், உச்சந்தலையை உலுக்கும் அளவுக்கு உலகின் ஆகச்சிறந்த ஹை-பிட்ச் பாடல்களைப் பாடியவர் என்றால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால், அது இசை ரசிகர்கள் உணர்ந்துகொண்ட உண்மை.

    - தொடரும்...

    English summary
    This is 25th year for A.R.Rahman's cinema music. He composes wonderful songs for all over the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X