Sai Abhyankkar: மீனாட்சி சௌத்ரியா இது..? சாய் அபயங்கருடன் செம கெமிஸ்ட்ரி.. வீடியோ வேற லெவலில் இருக்கே

சென்னை: இசைக் கலைஞராக இருந்து இப்போது தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார் சாய் அபயங்கர். சூர்யாவின் 45வது படத்திற்கு இசை அமைக்கும் இவர், தனது மூன்றாவது ஆல்பம் பாடலை இன்று ரிலீஸ் செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதில் சாய் அபயங்கருடன் மீனாட்சி சௌத்ரி நடனமாடியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

சாய் அபயங்கர், சுயதீன இசைக் கலைஞராக வளர்ந்து வந்து கொண்டு உள்ளார். இவர் தற்போது திரைத்துறையில் இசை அமைப்பாளராக பெரிய பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இசை அமைக்க கமிட் ஆகியுள்ளார். சாய் அபயங்கரைப் பொறுத்தவரையில், அவரது பெற்றோர்கள் திப்பு மற்றும் ஹரிணி என இருவரும் பாடகர்கள் ஆவர். இதனால் சாய்க்கு சிறுவயதில் இருந்தே இசையின் மீது தனி ஆர்வம் இருந்துள்ளது.

sai abhyankkar meenakshi chaudhary sithira puthiri music video

சாய் அபயங்கருக்கு தற்போது 20 வயதே ஆகின்றது. இந்த சிறிய வயதில் இசைத் துறையில் சர்வதேச அளவில் கவனத்தினை ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டில் அதாவது 2024ஆம் ஆண்டில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாடலாக இவர் இசை அமைத்துப் பாடிய “ கட்சி சேர” என்ற பாடல்தான் இடம் பெற்றது. இதனை யூடியூப் தளத்தில் மட்டும் 193 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த அளவிற்கு வரவேற்பு சினிமா பாடல்களுக்கே இல்லை. இந்தப் பாடலின் ரீச், சாய் அபங்கருக்கு பெரும் அறிமுகத்தினையும் அங்கீகாரத்தையும் இசைத்துறையில் பெற்றுக் கொடுத்தது.

மூன்றாவது பாடல்: அதன் பின்னர் இவர் வெளியிட்ட ஆசை தீர பாடலும் ஹிட் அடிக்க, இவரை படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முன் வந்தனர். தற்போதுவரை இரண்டு படங்களுக்கு இசை அமைக்க கமிட் ஆகியிருந்தாலும், வரும் காலங்களில் பல படங்களில் கமிட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில்தான் இவரது இசையில் உருவாகியுள்ள மூன்றாவது பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. சித்திர புத்திரி என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில் சாய் அபயங்கருடன் இணைந்து மீனாட்சி சௌத்ரியும் நடனமாடியுள்ளார். மொத்தம் 4 நிமிடங்கள் 47 நொடிகள் இந்தப் பாடல் உள்ளது.

டிரெண்ட்: இந்தப் பாடல் இப்போதைக்கு யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் டாப் 3இல் உள்ளது. இதுவரை சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சாய் அபயங்கருடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். பாடலைப் பார்த்த ரசிகர்கள் பாடல் சிறப்பாக உள்ளதாக கூறி வருகின்றனர். குறிப்பாக பாடலுக்கும் பாடல் வரிகளுக்கும் ஏற்றவகையில் மீனாட்சி சௌத்ரியைத் தேர்வு செய்தது சரி எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X