சரத்குமாரின் சண்டமாருதம் பாடல் ரிலீஸ்.. நமீதா பங்கேற்பு!

சென்னை : சரத்குமார் நாயகனாக நடித்துள்ள சண்டமாருதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது.

மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள படம் சண்டமாருதம். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, சிம்ஹா, பரத், மயில்சாமி, ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோசங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, மீராநந்தன், நமீதா, லிஸ்ஸி, ஸ்ரீபிரியா, லஷ்மிராமகிருஷ்ணன், நிரோஷா, கீர்த்திசுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், ஏ.வெங்கடேஷ், பாலாஜிமோகன், வி.சேகர், சுசீந்திரன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சமுத்திரகனி, ஆர்.கே.செல்வமணி, சண்முகசுந்தரம், ஆடம்தாசன், கே.ஆர். கே.ராஜன், திருச்சி ஸ்ரீதர், யாகியா, அபிராமி ராமநாதன், எஸ்.எ.ராஜ்கண்ணு, கே.ஆர்.செல்வராஜ், அருள்பதி, பெப்சி ஜி.சிவா, ஏ.என்.சுந்தரேசன், மதன் கார்கி, நிரவ்ஷா, எல்.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இசை வெளியீடு...

இசை வெளியீடு...

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி இசைத் தட்டை வெளியிட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தனுஷ், விக்ரம்பிரபு மற்றும் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

டபுள் ஆக்‌ஷன்...

டபுள் ஆக்‌ஷன்...

கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில், வில்லன், ஹீரோ என இரண்டு வேடங்களிலும் சரத்குமார் நடித்துள்ளார்.

இரண்டு நாயகிகள்...

இரண்டு நாயகிகள்...

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சரத்குமார் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா, மீரா நந்தன் என இரண்டு நாயகிகள்.

ராதாரவி, இமான் அண்ணாச்சி...

ராதாரவி, இமான் அண்ணாச்சி...

இவர்கள் தவிர, ராதாரவி, இமான் அண்னாச்சி, விஜயகுமார், தம்பிராமையா, ஜி.எம்.குமார், மோகன்ராம், சந்தானபாரதி, ஆதவன், ரேகா சுரேஷ், வின்செண்ட் அசோகன், கானா உலகநாதன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட சண்டைக்காட்சி...

பிரம்மாண்ட சண்டைக்காட்சி...

இப்படத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட கண்ணாடி அரங்கத்தில் ஐந்து காமிரா கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் கலைஞர்களுடன், நான்கு பேங்காக் ஸ்டண்ட் கலைஞர்களும் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றில் சரத்குமார் நடித்துள்ளார்.

பரபரப்பான சண்டைக்காட்சி...

பரபரப்பான சண்டைக்காட்சி...

தொடர்ந்து 10 நாட்களாக படமாக்கப்பட்ட இந்த பரபரப்பான சண்டைக்காட்சி, படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஊழிப்பெருங்காற்று...

ஊழிப்பெருங்காற்று...

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X