காந்தி ஜெயந்தி அன்று 'சர்கார்' இசை வெளியீடு: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
சென்னை: சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி நடக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்கார். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படத்தின் டப்பிங் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சர்கார் பற்றி இன்று மாலை ஒரு அறிவிப்பு உண்டு என்று படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் ட்வீட்டியிருந்தது.
இதை பார்த்த தளபதி ரசிகர்கள் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பாகத் தான் இருக்கும் கணித்தார்கள். அவர்களின் கணிப்பு சரியாகிவிட்டது.
சர்கார் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்போடு சேர்த்து விஜய்யின் புதிய போஸ்டர் ஏதாவது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடி புதிய போஸ்டர் எதுவும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











