ரசிகர்கள் சேர்ந்து வெளியிட்ட சர்கார் ஆடியோ.. இது ஒரு விரல் புரட்சி!
ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து சர்கார் ஆடியோவை வெளியிட்டனர்
சென்னை: டிஜிட்டல் முறையில் சர்கார் பாடல்கள் வெளியிடப்பட்டது.
சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஆடியோ வெளியீட்டை வித்தியாசமாக ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து வெளியிடும் படி ஏற்பாடு செய்திருந்தனர். இது ரசிகர்களின் சர்கார் என்று சொல்லப்பாட்டதைப் போல ஆடியோ வெளியிடப்பட்டது.

கூகுளில் சர்க்கார். சன்பிச்சர்ஸ்.இன் என்ற இணையதளத்திற்கு சென்று, எல்லோரும் வெளியிடும்படி அறிவுறுத்தினர். அரங்கில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் டிவி பார்ப்பவர்களும் சேர்ந்து வெளியிடலாம் என சொல்லப்பட்டது.
ஒருவிரல் புரட்சியின் முன்னோட்டத்தைப் போல சர்கார் திரைப்படத்தின் ஆடியோ ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து டிஜிட்டல் முறையில் வெளியிட்டனர்.
முதல்முறையாக வித்தியாசமான முறையில் ஒரு ஆடியோ லாஞ்ச்சை செய்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications