தீபாவளிக்கு ரிலீசாகும் சசிக்குமார் படம்... சூப்பர் மெலடி பாடல் வெளியீடு!

சென்னை : தீபாவளியையொட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ள படம் எம்ஜிஆர் மகன்.

சசிக்குமார், மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரொமாண்டிக் பாடல் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

எம்ஜிஆர் மகன் படம்

எம்ஜிஆர் மகன் படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் இயக்கியவர் பொன்ராம். இந்தப் படங்கள் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படங்களாக அமைந்த நிலையில் தற்போது சசிக்குமாரை வைத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார் பொன்ராம்.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

தீபாவளி ரிலீசாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. படத்தில் சசிக்குமாருடன் மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

அந்தோணி தாசன் இசை

அந்தோணி தாசன் இசை

படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடகர் அந்தோணி தாசன் இசையமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். அதிரடி நகைச்சுவை படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. குடும்பப் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில், தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் தீபாவளியையொட்டி நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் ரொமாண்டிக் பாடல் ஏரெடுத்து பாக்காம தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பாடல் வெளியீடு

பாடல் கிராமத்து பின்னணியில் சசிக்குமார் மற்றும் மிருணாளினிக்கு இடையிலான காதலை இயல்பாக சொல்லும்வகையில் அமைந்துள்ளது. சிறப்பான மெலடியாக இந்தப் பாடலை அந்தோணி தாசன் அமைத்துள்ளார். படத்தின் பின்னணி முதலியவற்றையும் அவர் சிறப்பாக அமைத்துள்ளது ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின் மூலம் அறிய முடிகிறது.

கிராமத்து பின்னணி

கிராமத்து பின்னணி

பொன்ராமின் முந்தைய படங்களும் கிராமத்து பின்னணியில் அமைந்த நிலையில் எம்ஜிஆர் மகனும் அதேபோல உருவாகி உள்ளது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X