twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாட்சிகள் சொர்க்கத்தில்... அதிர வைத்த பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்! #WitnessInHeaven

    By Shankar
    |

    Recommended Video

    சாட்சிகள் சொர்க்கத்தில் ட்ரைலர்-வீடியோ

    இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது.

    ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி யாழ் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது இந்த நிகழ்ச்சி. அன்று சிட்னியில், காலையில் இருந்தே அடைமழை, இருந்தும், மண்டபம் நிறைந்த மக்கள். ஒவ்வொருவர் முகத்திலும் ஏதோவொரு எதிர்பார்ப்பு.

    அந்த மழையிலும் அதுவும் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவருக்கு இருந்த வேலையை

    ஒதுக்கிவைத்துவிட்டு திரைப்பட இசை விழாவிற்கு வந்திருந்தனர் என்றால் அது பொழுதுபோக்குக்காக அல்ல என்பது புரிந்தது. வலிகள் மிகுந்த தங்கள் சொந்த சரித்திரத்தை இன்னொரு முறை திரும்பிப் பார்க்க கனத்த மனத்தோடு வந்திருந்தனர்.

    டாக்டர் மன்மோகன்

    டாக்டர் மன்மோகன்

    ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாட்சிகள் சொர்க்கத்தில்' படம் குறித்து டாக்டர் மன்மோகன் பேசுகையில், "இந்தப் படத்தைப்பற்றி முதலில் கேள்விப்பட்ட போது, இந்தப்படத்தையோ அல்லது இந்தப்படம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளையோ எதிர்நோக்கும் மனநிலை தனக்கு இருக்குமோ இல்லையோ என்று குழப்பம் இருந்தது. பின்னர் ஈழன் இளங்கோ தொடர்புகொண்டு, ஈழத்தில் நடந்த எந்தக்கட்சிகளும் இப்படத்தில் சித்தரிக்கப்படவில்லை என்று கூறினார். அதற்காக நாம் பயந்து இருந்துவிட முடியாது. இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் ஆவணங்களாக சரித்திரத்தில் இருக்கப்போகின்றன ஆகையால் நாம் நமது பங்களிப்பையும் ஆதரவையும் தருவது எமது கடமை என்பதற்காகவே வந்தேன்," என்று கூறினார்.

    முனைவர் பச்சைவதி

    முனைவர் பச்சைவதி

    'அன்னைமொழி அன்புவழி' நிறுவனர் தமிழ் முனைவர் பச்சைவதி பேசுகையில், "ஒருசிலருக்கும் அவரவர் படைப்புகளுக்கும் சம்மந்தம் இருக்காது. நிஜத்தில் ஒரு விதமாகவும் தங்கள் படைப்புகளில் வேறொருவிதமாகவும் வாழ்வார்கள். ஆனால் ஈழன் இளங்கோவையும் அவர் படைப்புகளையும் பார்த்தால் ஒரேமாதிரியாக இருக்கும்.

    சிலர் வாழ்க்கையில் தங்களால் செய்யமுடியாததை படத்தில் போலியாக செய்து தமது தாகத்தை தீர்த்துக்கொள்வார்கள். அதுபோன்று இல்லாது தனது மனதை பிரதிபலிக்கும் ஒரு பிம்பமாகவே ஈழன் இளங்கோவின் படைப்புகள் இருக்கும் என்பதுதான் அதன் அர்த்தம் என்று நாம் புரிந்துகொண்டோம்," என்றார்.

    இயக்குநர் சுரேஷ்

    இயக்குநர் சுரேஷ்

    சிட்னியில் திரையுலகில் இயக்குநராக காலடி வைத்திருக்கும் சுரேஷ் அவர்கள் பேசுகையில், "ஈழன் இளங்கோ ஒரு சிறந்த உணர்ச்சிகரமான, பரபரப்பான படைப்பாளி.

    இந்தப்படம் ஒரு நிறைவான படமாகத்தான் தனக்கு தெரிகிறது. வணிகவியல் கலப்பின்றி, மனிதர்களின் உணர்வுகளை, நடந்த நிகழ்வுகளை வாய்மொழியில், திரையில் சொல்லமுடியும்

    என்றால் அதற்கு இந்தப்படம் ஒரு உதாரணமாக இருக்கும். எப்படி மணிரத்னம் மற்றும் பாலுமகேந்த்ரா அவர்களின் படங்களில் ஒருசில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு கதையை கூறமுடியுமோ அந்த திறமையை நிச்சயம் ஈழன் இளங்கோவிடமும் காணமுடிகிறது," என்றார்.

    சதீஷ் வர்ஷன்

    சதீஷ் வர்ஷன்

    படத்துக்கு இசையமைத்த சதீஷ் வர்ஷன் பேசுகையில், "முதல் முதலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அழுதுவிட்டேன் (இவ்வாறு சொல்லிவிட்டு, உணர்ச்சிமயத்தில் மேடையிலேயே அழுதார் சதீஷ் வர்ஷன்). என்ன மாதிரி ஒரு படம் செய்திருக்கிறார் இளங்கோ சார்... இது ஒரு சிறந்த படம், எல்லாரும் பாருங்க," என்றார் கண்ணீருடன்.

    தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் நிறுவனர் அனகன்பாபு, "பேசுகையில் உதவி என்றால் ஓடிவந்து செய்பவர் ஈழன் இளங்கோ. அவர் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி," என்றார்.

    நிகழ்ச்சியில் இன்பத் தமிழொலி, பாலசிங்கம் பிரபாகரன், நடராஜா, கருணாகரன் நடராஜா, பென்ஜமின் சூசை, இளந்திரையன் ஆறுமுகம், வசந்தராஜா, கலாநிதி கௌரிபாலன், காந்திமதி தினகரன், வைத்திய கலாநிதி கேதீஸ் ஆகியோர் ஈழன் இளங்கோவை வாழ்த்தியும் திரைப்படத்திற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்கள்.

    ஈழன் இளங்கோ

    ஈழன் இளங்கோ

    ஈழன் இளங்கோ பேசுகையில், "கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட துறையில் ஈழத் தமிழர் என்னென்ன இன்னல்களை எல்லாம் சந்தித்தார்களோ, நீண்ட இடைவேளையின்

    பின்னர் இன்றும் அதே இன்னல்களைத்தான் அனுபவிக்கிறோம், அதற்கு காரணம் தெளிவின்மை மற்றும் வரலாறு அறியாமை. நமது துறையை வளர்க்கவேண்டுமானால் படைப்பாளிகள்தான் முதலில் திருந்தவேண்டும், ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தரர்களோ அல்ல.

    குறைந்த செலவில் நிறைந்த படம் எடுக்குமளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. சிந்தையில் வருவதை திரையில் காட்ட மட்டும்தான் தொழில்நுட்பம். மிகைப்படுத்திக்காட்டவேண்டும் என்ற தவறான எண்ணத்தில் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தாது படைப்பாளிகள் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தவேண்டும். தரமான படைப்புகளை படைப்பாளிகள் தயாரித்தார்களே ஆனால் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் தேடிவருவதோடு பார்வையாளர்களும் ஆதரவு தருவார்கள், அதைவிட்டுவிட்டு தரத்தின் அர்த்தம் புரியாமல் தரம் இல்லாத படைப்புகளை படைத்துக்கொண்டு மற்றவர்களை குற்றம் சொல்வது நியாயமில்லை. நேர்மையான செயல்பாட்டிற்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்பதை எனது முதல்படமான 'இனியவளே காத்திருப்பேன்' படத்திற்கு மக்கள் தந்த ஆதரவே சாட்சி," என்றார்.

    பாலச்சந்திரன்

    பாலச்சந்திரன்

    படத்தில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன. பாலச்சந்திரன் திரையில் காட்சியளித்தபோது கூட்டத்தில் பெரும் சலசலப்பு. ஈழன் இளங்கோவின் மகன் சத்யன்தான் பாலச்சந்திரன் வேடத்தில் நடித்திருந்தார். அவர் அந்த பாத்திரத்தில் அப்படியே பாலச்சந்திரன் போலவே இருந்தார். சொற்கோவினதும் மோகன் ராஜுவின் வரிகளிலும் வர்ஷன் மற்றும் சுர்முகி குரலிலும் வர்ஷன் இசையமைப்பில் இரண்டு பாடல்களுடன் இசை சிறப்பாக இருந்தது.

    உலகம் முழுவதும் இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

    English summary
    The audio and trailer launch of Satchigal Sorgathil, a movie on Balachandiran murder, was held at Sydney, Australia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X