Vibe ஆன பாட்டு எங்கே.. தமிழ் சினிமாவில் இது மட்டும்.. லப்பர் பந்து இசையமைப்பாளர் ஆதங்கம்

சென்னை: ஜோக்கர், பவர் பாண்டி, குட் நைட், லவ்வர், லப்பர் பந்து போன்ற படங்களுக்கு சூப்பர் ஹிட்டான பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். இவர், நேற்று நடந்த பட விழாவில் தமிழ் குறித்தும் தமிழ் மொழி குறித்து பேசி ஆதங்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த மாதிரி நடப்பதை அவரால் ஏற்க முடியவில்லையாம். இதை கேட்டு பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை ஒல்லிக்குச்சி ராக்ஸ்டார் வந்ததற்கு பிறகு தான் இப்படி நடப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை காெண்டவர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து சதுரங்கவேட்டை, வேலையில்லா பட்டதாரி 2, பவர் பாண்டி, ஜெய்பீம், லப்பர் பந்து, குட்நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற சில்லா சிறுக்கியே, ஆசை உறவே பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது,. இளைஞர்களின் மனதை வருடிய பாடல் வரிகளாகவும் அமைந்தன. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். நேற்று நடந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், தமிழ் மொழி குறித்து பேசியிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sean Roldan speaking at the trailer launch of the film Tourist Family

தமிழ் மொழி: இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சந்தோஷ் நாராயணனுக்கு நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார். இவரது இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஷான் ரோல்டன், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இசை படம் என்றே கூறலாம். தமிழ் திரைத்துறையில் ஒரு படம் எடுத்து ஒரு அழகான தமிழ் வார்த்தையை எழுதக் கூட இடம் இல்லையா? என்பது வருத்தமாக இருக்கிறது. நானும தங்கிலிஷ் வரிகளுக்கு இசையமைக்கிறேன். அதே நேரத்தில் தமிழ் பாடல்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய கடமை இசையமைப்பாளர்களுக்கு இருக்கிறது. சூப்பரான மொழிக்குள் பிறந்து விட்டு மொழியே தெரியாமல் இருப்பது மன வேதனையை தருகிறது. முகமழையா Vibe 5 இல்லைன்னு சொல்லிடுவாங்க ப்ரோ என்றும் கடிந்துகொண்டார்.

கொண்டாட்டத்திற்கான பாடல் இல்லை: இந்த படத்தில் இடம்பிடித்துள்ள 6 பாடல்களுமே படத்தோடு பயணித்து வரக்கூடியது. எதுவும் நீங்கள் சொல்லும் வைஃப் மோடில் இருக்க கூடிய கொண்டாட்டம் நிறைந்த பாடல்கள் கிடையாது. இது ஒரு குடும்பத்தின் பாடல் என ஷான் ரோல்டன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஏதோ படத்திற்காக பண்ணாமல் உண்மையாக உழைத்திருக்கிறேன். ஒரே நாளில் உயரத்திற்கு போய் விட்டால் எதுவும் தெரிந்துவிடாது. ஒரு விஷயம் செய்தால் உடனே ஒரே நாளில் தூக்கி வைத்து விடுவார்கள். அந்த உயரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது. 10 ஆயிரம் பேர் பலவித கருத்துக்களை தெரிவிப்பார்கள் என தெரிவித்தார்.

நம்பர் 1 இடமா: எப்போதும் என்னிடம் பலரும் கேட்பார்கள் எப்போது நீங்க மேலே வரபோகிறீர்கள். நான் அந்த நோக்கத்திற்காக இசையை தேர்ந்தெடுக்கவில்லை. நம்பர் 1 ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு வரவில்லை. ஒரு நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் ஆவல் அதிகம் இருக்கிறது என ஷான் ரோல்டன் தெரிவித்தார். மேலும், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்டிருக்கும் சசிகுமார் சாரை பார்த்து வியந்து பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி என ஷான் ரோல்டன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X