இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.. ஹரீஷ் படப் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்!

இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘ஏய் கடவுளே’ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை: இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் இடம்பெற்றுள்ள, 'ஏய் கடவுளே' பாடலில் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவரது பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். அவர்களுடன் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் என நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். அப்படத்திற்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கண்ணம்மா பாடல்

கண்ணம்மா பாடல்

ஏற்கனவே இப்படத்தில் இடம்பெறும் ‘கண்ணம்மா' பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது அப்படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஏய் கடவுளே' எனத் தொடங்கும் அப்பாடல் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யான் அப்பாடலைப் பாடியுள்ளார்.

வேகத்தை அதிகரிக்கும் பாடல்கள்

இது குறித்து, இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறுகையில், "கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் 'ஏய் கடவுளே' படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

புதிய அனுபவம் தரும் ஏய் கடவுளே

புதிய அனுபவம் தரும் ஏய் கடவுளே

இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, 'ஏய் கடவுளே' அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

விநியோக உரிமை

விநியோக உரிமை

மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X