"சிட்னி"யில் சீமராஜா பாடல் ரிலீஸ்.. அதிரடி திட்டம்.. அசத்தப்போகும் தயாரிப்பாளர்!

சீமராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்தவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

சிட்னி-யில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ

சென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாம்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஓபனிங் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகச் சொன்ன காலம் போய் இப்போது மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று மாஸ் ஹிட் அடித்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் சீமராஜா.

 Seemaraja audio release venue out!

கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ள சிவா இந்த திரைப்பட அறிவிப்புக்கு பிறகு விதவிதமான கெட்டப்களில் போட்டோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்.

சமந்தா, கீர்த்தி சுரேஷ், சூரி, யோகிபாபு என கலக்கல் கூட்டணி இருப்பதாலும், டி.இமான் இசையமைப்பதாலும் இப்படத்தின் எதிர்பார்ப்பு டாப் கியரில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் பாடல்களை வழக்கத்திற்கு மாறாக புதிய முயற்சியாய் தமிழகத்தின் "சிட்னி"யான மதுரையில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சினிமாவுக்கும் மதுரைக்கும் இருக்கும் உறவு தாயின் தொப்புள்கொடி உறவு போன்றது. சினிமா மீது மதுரை மக்களுக்கு இருக்கும் பாசத்திற்கான சாட்சியாக இந்த விழாவை மதுரையில் நடத்த 24 ஏம் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனர் ஆர்.டி.ராஜா திட்டமிட்டுள்ளார்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் ஆக்ஸ்ட் 3 ஆம் தேதி இந்த விழா மதுரையில் நடைபெற உள்ளது. படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்தவேண்டுமென தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா முடிவெடுத்துவிட்டாராம். மேலும் படத்தின் மையக்கதை தமிழகத்தின் தெற்குப்பகுதி கிராமங்களை அடிப்படையாகக் கொண்டதாலும் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். பாடல் வெளியீட்டு விழா வெற்றிபெற படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

மக்கள் கலைஞன், சூப்பர் சிங்கர் 6ன் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்காக ஒரு பாடல் பாடும் நிலையில் ஆடியோ லாஞ்சில் அதிரப்போவது மதுரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும்தான்...! சீமராஜா... சீமைக்கே ராஜா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X