இந்திய-வங்க படத்தில் பாடுகிறார் ஷகீரா

இந்தியாவைச் சேர்ந்த தேபஜோதி மிஸ்ராவின் இசையில், வங்கதேசத்தின் இனாமுல் கரீம் நிர்ஜாரின் இயக்கத்திலும் உருவாகும் டிசையர் தி பிளையிங்
பட்டர் என்ற படத்தில்தான் ஷகீராவின் பாடல் இடம் பெறுகிறது. மொத்தம் ஐந்து பாடல்களுக்கு குரல் கொடுக்கிறார் ஷகீரா. இப்பாடல்களுக்கான இசையை
வித்தியாசமாக வடிவமைக்கிறாராம் மிஸ்ரா.
இப்படத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சில முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனராம்.அவர்கள் யார் என்ற விவரத்தை தற்போதைக்கு
ரகசியமாக வைக்கப் போகிறாராம் நிர்ஜார். இப்படத்தில் பாடல் மட்டும் பாடாமல்,ஷகீராவை நடிக்க வைக்கவும் முயற்சிகள்நடந்து வருகிறதாம். இது பலிக்குமா
என்பது தெரியவில்லை. இருந்தாலும் நம்பிக்கையுடன் தொடர்ந்து ஷகீராவை நச்சரித்துக் கொண்டிருக்கின்றனராம்.
இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, மற்றும் வேறுசில நாடுகளில் நடைபெறவுள்ளதாம்.படத்தின் கதை என்ன என்று கேட்டால் அதை இப்போது கூற முடியாது. படிப்படியாக அது தெரிய
வரும் என்றார். திரைப்படத்தில் ஷகீரா இருக்கிறார், சில இந்திய, வங்கதேச நடிகர்கள் இருக்கிறார்கள்.இவ்வளவு போதும் இப்போதைக்கு. பிறகு முழு
விவரங்களையும் தெரிவிக்கிறேன் என்று முடித்துக் கொண்டார் நிர்ஜார்.
கொலம்பியாவைச் சேர்ந்த ஷகீரா, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை தனது குரலாலும்,
நடனத்தாலும் ஈர்த்து வைத்திருப்பவர். உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போது கூட ஷகீரா கலக்கலான பாடலையும், நடனத்தையும் அளித்து
குஷிப்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











