சீறிப்பாய ரெடியான ஷங்கர்.. கேம் சேஞ்சரின் தாறுமாறான அப்டேட் வந்துடுச்சு.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் 2வது சிங்கிள் தொடர்பான சூடான அப்டேட்டை சற்றுமுன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அதன் 2ம் பாடல் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இந்தியன் படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2வில் இணைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாட காத்திருந்தனர்.

shankar game changer ram charan

ஆனால், இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தன. கேம் சேஞ்சர் படமாவது எப்போது வெளியாகும் சொல்லுங்கள் ஷங்கர் என ராம்சரண் ரசிகர்களும் அவரை நச்சரிக்கத் தொடங்கி விட்டனர்.

கேம் சேஞ்சர் 2வது சிங்கிள்: ஜரகண்டி பாடலை போலவே இன்னமும் பிரம்மாண்டமாக கலர்ஃபுல்லாக ஷங்கர் ஸ்டைலில் தமன் இசையில் உருவாகி உள்ள "ரா மச்சா மச்சா" பாடல் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் "ரா மச்சா மச்சா" என தொடங்கும் இந்த பாடல் இந்தியில் "தம் து திக்காஜா" பாடலாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போ?: இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி அடிவாங்கிய நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் தான் கேம் சேஞ்சர் வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் இந்த ஆண்டே படத்தை வெளியிட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்ட நிலையில், வரும் டிசம்பர் 20ம் தேதி கேம் சேஞ்சர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 28ம் தேதி வெளியாகும் பாடலுடன் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு ராம் சரண் ரசிகர்களுக்கு வெயிட்டான ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

சீறிப்பாயும் ஷங்கர்: கேம் சேஞ்சர் திரைப்படம் ஷங்கருக்கு நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் ஷங்கர் வேள்பாரி படத்தை 3 பாகங்களாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X