twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போது இதுதான் தேவை..கவலைகளில் இருந்து மக்கள் விடுபட ஹேப்பி பாடல்.. பிரபல பாடகர் தகவல்!

    By
    |

    சென்னை: தனது பாடல் கவலைகளில் இருந்து மக்களை குணப்படுத்தும் என்று பாடகர் சங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.

    பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், எஹசான் லாயுடன் இணைந்து படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

    தமிழில், யாவரும் நலம், விஸ்வரூபம் உட்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர்கள் இந்தியில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

    இணையத்தில் புது முயற்சி .. மஞ்சிமா மோகனின் இணையத்தில் புது முயற்சி .. மஞ்சிமா மோகனின் "ஒன் இன் எ மில்லியன்" திறமைக்கான ஒரு தளம் !

    பன்டி அவுர் பப்லி

    பன்டி அவுர் பப்லி

    தாரே ஜமின் பர், பிர் மிலேங்கே, டான் 2, தொடா பியார் தொடா மேஜிக், பன்டி அவுர் பப்லி, ஜானி கட்டார், குச் நா கஹோ உட்பட ஏராளமான இந்தி படங்களுக்கு அமைத்துள்ள இவர்கள், மலையாளம், தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். சங்கர் மகாதேவன் இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். தொடர்ந்து பாடி வருகிறார்.

    உருகுதே மருகுதே

    உருகுதே மருகுதே

    தமிழில், வராக நதிக்கரையோரம், உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு, என்ன சொல்ல போகிறாய்.., உருகுதே மருகுதே உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவர், இப்போது தனிப் பாடல் ஓன்றை உருவாக்கி வருகிறார். இதற்கு மகிழ்ச்சியான பாடல் (happy song) என்று டைட்டில் வைத்துள்ளார். இதை ஜாவேத் அக்தர் எழுதி உள்ளார்.

    ஆன்லைன் இசை நிகழ்ச்சி

    ஆன்லைன் இசை நிகழ்ச்சி

    இதுபற்றி அவர் கூறும்போது, 'இக்கட்டான சூழல்நிலைகளில், இசை மனதுக்கு மருந்தாகட்டும் என்று நினைக்கிறேன். இந்த சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு இரண்டு ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். புதிய பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறோம். வீட்டில் என்னுடன் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள் (அவர் மகன்கள் சித்தார்த், சிவம்). நாங்கள் மூவரும் புதிய பாடலை உருவாக்குவோம்.

    என்ன வழி இருக்கிறது

    என்ன வழி இருக்கிறது

    இதற்கு 'மகிழ்ச்சியான பாடல்' என்று டைட்டில் வைத்துள்ளோம். அனைத்து கவலைகளில் இருந்தும் விடுபடுவது பற்றிய பாடல் இது. பாடலில் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே இருக்கும். இப்போது அதுதான் நமக்குத் தேவை. சுற்றியுள்ள நெருக்கடி மன உறுதியை குலைத்துவிட்டது. அதனால், மக்களிடம் வலிமையாக இருக்கச் சொல்கிறோம். அதைச் சொல்வதற்கு இசையை விட வேறு என்ன வழி இருக்கிறது? என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Shankar Mahadevan hopes his new song will heal hearts
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X