ஐ பாட்டு லிஸ்ட்.... வெளியிட்டார் ஷங்கர்!
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்களை வெளியிட்டார் இயக்குநர் ஷங்கர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ஐ பட ஆல்பத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடல்களை கபிலனும் மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர். பாடல்கள் என்ற தலைப்பில் கபிலன் & கார்க்கி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது (இந்த கபிலன் வைரமுத்து மகன் அல்ல).
ஏழு பாடல்களில் நான்கை கபிலனும், மூன்று பாடல்களை கார்க்கியும் எழுதியுள்ளனர்.
பாடல் விவரம்..

மெர்சலாயிட்டேன்...
இந்தப் பாடலை கபிலன் எழுதியுள்ளார். அனிருத்தும் நீதி மோகனும் பாடியுள்ளனர்.

என்னோடு நீ இருந்தால்
இந்தப் பாடலையும் கபிலன்தான் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராமும் சுனிதா சாரதியும் பாடியுள்ளனர்.

லேடியோ...
இந்தப் பாடலுக்கு நிகிதா காந்தி குரல் கொடுத்துள்ளார். கார்க்கி எழுதிய பாடல் இது.

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
இதுவும் கார்க்கியின் பாடல்தான். ஹரிச்சரண், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.

ஐலா ஐலா...
கார்க்கி எழுதிய மூன்றாவது பாடல் இது. ஆதித்ய ராவ், நடாலியா டி லுசியா பாடியுள்ளனர்.

என்னோடு நீ இருந்தால்
ரிப்பீட்டாக வரும் இந்தப் பாடலை சின்மயி, சித் ஸ்ரீராம் பாடியுள்ளனர். கபிலன் எழுதியுள்ளார்.

மெர்சலாயிட்டேன்
ரீமிக்ஸ் பாடலாக இன்னொரு முறை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. அனிருத்தும் நீதி மோகனும் பாடியுள்ளனர். கபிலன் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











