மனதை மயக்கும் குண்டுமல்லி... அசத்தலான மியூசிக் ஆல்பம் வெளியீடு

சென்னை : சாந்தனு பாக்யராஜ் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள குண்டுமல்லி மியூசிக் ஆல்பம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திருமண வைபவத்தை ரொமான்டிக்காக காட்டி உள்ள இந்த ஆல்பம் இது இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து குண்டுமல்லி மியூமிக் ஆல்பத்தில் அவர் நடித்துள்ளார். சரிகம என்டர்டைன்மென்ட் வழங்கும் இந்த மியூசிக் ஆல்பத்தை ஆதவ் கண்ணதாசன் இயக்கி உள்ளார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Shanthnus Gundumalli music video released

சாந்தனு, மகிமா நம்பியார் ஜோடி இணைந்து நடித்துள்ள இந்த பாடல் க்யூட்டான அனுபவத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. மியூசிக் ஆல்பத்திற்கான டீசரை செம வரவேற்பை பெற்றது. டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறையவிடாமலும், ஏமாற்றத்தை தராமலும் மியூசிக் வீடியோ வெளியாகி உள்ளது.

குண்டுமல்லி என துவங்கும் இந்த பாடலை ஜெரால்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ளார். விவேக் ரவி இந்த பாடலுக்கான வரிகளை எழுதி உள்ளார். யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் விரைவில் மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்று, புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்கேஆர்பி ப்ரொடக்ஷன்ஸ் பேனரில், எம்.கே.ராம்பிரசாத் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு மாதேஸ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். காயத்ரி ரகுராம் நடனம் அமைத்துள்ளார். கல்யாண வைபவத்துடன், காதலை கலந்து, மிக அழகான ஒளிப்பதிவுடன் குண்டுமல்லி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

சாந்தனு தற்போது மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கும் ராவண கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்தில் கயல் ஆனந்தி லீட் ரோலில் நடிக்கிறார். இந்த படம் கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. மகிமா நம்பியாரும் தற்போது ஓ மை காட், ஐங்கரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X