ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது !

சென்னை : நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்'இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கமே இந்த பாடல்.

எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல்.

 இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஸ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

அதிர்ஷ்டசாலியாக

அதிர்ஷ்டசாலியாக

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இசை மற்றும் திரைப்பட வாழ்க்கையை சிரமமின்றி கையாண்டு வரும் ஸ்ருதி இது குறித்து கூறும்போது "இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

ஏற்றுக்கொள்வதற்கான பயணம்

ஏற்றுக்கொள்வதற்கான பயணம்

எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது என்ற மனதில் பட்ட கருத்துக்களை பதிவு செய்து உள்ளார் ஸ்ருதி.

 யூடியூப் சேனலில்

யூடியூப் சேனலில்

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்'-ல் ஸ்ருதி பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குனரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார். இப்பாடல் இன்று விஎஹ்1 மற்றும் ஸ்ருதியின் யூடியூப் சேனலில் வெளியானது. இந்த ஊரடங்கு கால கட்டத்தில் இப்படி பல முயற்சிகள் செய்து தான் பல பிரபலங்கள் பல திறமைகளை காட்டி மக்களை மகிழ்விக்கின்றனர். அதற்கு இணையம் ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கிறது என்பதற்கு மாற்று கருது கிடையாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X