மூன்று தலைமுறை பாடிய ‘ஷியாமா ராகம்’ ஆடியோ ரிலீஸ்

சென்னை : கே.ஜே.யேசுதாஸ் அவருடைய மகன் விஜய் அவரின் மகள் அமயா என மூன்று தலைமுறையும் இணைந்து தட்சிணாமூர்த்தி இசையில் பாடிய " ஷியாமா ராகம்" என்ற மலையாள படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது.

பல இரவுகளை இனிமையாக்கி சொக்கவைத்து மாய உலகிற்கு அழைத்து சொல்லும் குரலுக்கு சொந்தக்காரர் கே.ஜே.யேசுதாஸ். மூன்றாம்பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே என்ற பாடலை எப்போது நாம் கேட்டாலும் அவர் குரலின் இனிமையில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரகாசிக்கிறது இவரின் குரல். இசை உலகில் என்றும் இவர் தான் ஜாம்பாவான்.

 Shyama ragam audio release

" ஷியாமாராகம்" என்ற மலையாள படத்தில் ஆடியோ ரிலீஸ் சென்னையில் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது. இந்த படத்தில் கே.ஜே.யேசுதாஸ் அவரின் மகன் விஜய் யேசுதாஸ் அவருடைய மகள், அமயா விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையும் இணைந்து தட்சிணாமூர்த்தி இசையில் பாடி உள்ளனர்.

இவ்விழாவில் பேசிய கே.ஜே.யேசுதாஸ், " பகவான் கொடுத்த வரபிரசாதம்தான் நான் இன்னமும் பாடிக் கொண்டிருப்பது. குருவை என்றும் மறக்க கூடாது. கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்திற்கு விருதுகள் நிச்சயம் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று என்றார்.

 Shyama ragam audio release

விழாவில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், இந்தப் படத்தில் நான் பாகவதராக நடித்திருக்கிறேன். எனக்கு இந்த கதாபாத்திரத்தை சிபாரிசு செய்தவர் யேசுதாஸ் அவர்கள் தான். எனக்காக அருமையான ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

இந்த விழாவில் ஒய்.ஜி.மகேந்திரன், சுதா மகேந்திரன், மதுவந்தி, பின்னனி இசையமைப்பாளர் சரத், விஜய் யேசுதாஸ், அமயா, இயக்குனர் சேது இயாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் இணை தயாரிப்பாளர்கள் கண்ணன், பினோஜ் திருமதி.தட்சிணாமூர்த்தி, விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டு இப்படம் வெற்றிப்பெற வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X