லூசுப்பெண்ணே பாட்டுக்கு அப்புறம் சிம்பு வாய்ஸில் பக்கா சாங்.. பிரதீப் ரங்கநாதன் மச்சக்காரன் தான்!
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் நிலையில், அந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு தள்ளிப் போவதாக அதிகாரப்பூர்வமாகவே டிராகன் படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கு போட்டியாக பிப்ரவரி 22ம் தேதி டிராகன் திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே அந்த படத்தில் இடம்பெற்ற "வழித்துணையே" பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது சிம்பு பாடிய "ஏன்டி விட்டுப் போன" என்கிற பிரேக்கப் சாங் வெளியாகி இருக்கிறது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வரும் நிலையில், அவரது இசையில் அடுத்தடுத்து வெளியாகும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
குழம்பிய அர்ச்சனா கல்பாத்தி: இன்று மாலை 6 மணிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் திரைப்படத்தின் "ஏன்டி என்ன விட்டுப்போன" பாடல் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், அந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என்கிற ப்ரோமோ வெளியானதில் இருந்தே ரசிகர்கள் அதற்காக காத்திருந்தனர். ஷார்ப்பாக 6 மணிக்கு அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அப்டேட்டில் நாளை பாடல் வெளியாகும் என்றும் பாடலின் லிரிக் வீடியோ லிங்க் இல்லாமல் இருந்ததும் ரசிகர்களை அப்செட்டாக்கியது. அக்கா இன்னைக்குத்தான் அப்டேட் என அலர்ட் செய்த நிலையில், உடனடியாக பழைய ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு சிம்பு ரசிகர்களை ஹேப்பியாக்க பாடலை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

சிம்பு குரலில் பிரேக்கப் பாடல்: ஓ மை கடவுளே படத்தை இயக்கி ஹிட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள டிராகன் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் "வழித்துணையே" பாடல் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்த பாடலை இன்னமும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வெளியிட வேண்டும் என்கிற முனைப்புக் காட்டிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து தான் சிம்பு படம் இயக்கவுள்ள நிலையில், அவரையே வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார். சிம்பு குரலில் வெளியாகி உள்ள "ஏன்டி விட்டுப்போன" பாடலை சிம்பு பாடும் விதத்தை பார்த்தாலே ரசிகர்களுக்குப் பிடித்துவிடும்.
லூசுப்பெண்ணே: "காதல் வளர்த்தேன்", "லூசுப்பெண்ணே" என சிம்புவின் சூப் சாங் எல்லாமே ரசிகர்களின் ஆல் டைம் ஃபேரைட் பாடல்கள் தான். அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்களை கேட்டமாத்திரத்திலேயே பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு வரிகளும் பாடத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் உடன் கல்லூரியில் லவ் பண்ணும் அனுபமா அவரை பிரேக்கப் செய்துவிட இந்த பாடல் வருகிறது. அதன் பின்னர், கயாடு லோஹரை பிரதீப் ரங்கநாதன் காதலித்து சேர்வது தான் டிராகன் படத்தின் கதையாக இருக்கும் என்றும் தெரிகிறது. லவ் டுடே படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படமும் அவருக்கு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











