Saindhavi: அதிகமாக கிடைச்சது ஜிவி சார்கிட்டதான்.. மேடையில் உருக்கம் காட்டிய சைந்தவி!
மலேசியா: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கடந்த 2013ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இவர்கள் இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்திருந்தனர்.
கோலிவுட்டில் மிகவும் அன்னியோன்யமான தம்பதியாக உலவி வந்த இவர்களின் இந்த முடிவு ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆயினும் இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் இணைந்து மயக்கம் என்ன படத்தின் பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெயில் படம் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய நிலையில் ஏராளமான ஹிட் படங்களை முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து இவரது இசைப் பயணம் பல ஆண்டுகளை கடந்து சிறப்பாக அமைந்து வருகிறது. நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் இவர் அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டில் பாடகி சைந்தவியை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் பள்ளி பருவத்தில் இருந்தே துவங்கியதாக முன்னதாக பேட்டிகளில் இவர்கள் தெரிவித்திருந்தனர்.
விவாகரத்து முடிவு: இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை கூட்டாக அறிவித்திருந்தனர். மிகவும் அன்னியோன்யமான தம்பதியாக வலம் வந்த இவர்களின் இந்த முடிவு ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆயினும் இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மலேசியாவில் இசை நிகழ்ச்சியை நடத்திய ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி இணைந்து பட பாடலை பாடியுள்ளார். முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மயக்கம் என்ன படத்தின் பிறைதேடும் இரவிலே பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்த நிலையில் தற்போது அந்த பாடலை இவர்கள் இருவரும் இணைந்து மேடையில் பாடியுள்ளனர்.
இணைந்து பாடிய ஜிவி பிரகாஷ் & சைந்தவி: இந்த இவர்களின் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சைந்தவி, ஜிவி பிரகாஷ் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியரில் அதிகமான ஹிட் பாடல்களை ஜிவி பிரகாஷ் தான் கொடுத்ததாக அவர் உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். அத்தகைய ஹிட் பாடல்களை கொடுத்ததற்கு ஜிவி பிரகாஷிற்கு நன்றியை தெரிவித்துள்ள சைந்தவி, மலேசிய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேடையில் இவர்கள் இணைந்து பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் சைந்தவியின் இந்த பேச்சும் வைரலாகி வருகிறது.
சிறப்பான புரிதல்: அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் இந்த ஆண்டில் விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இணைந்துள்ளனர். விவாகரத்து என்பது இவர்களின் தனிப்பட்டவிஷயமாக பார்க்கப்படும் நிலையில், தங்களின் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவர்கள் மீண்டும் இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. பிரிவை அறிவித்த நிலையிலும் இவர்களிடம் சிறப்பான புரிதல் காணப்படுகிறது. இதைத்தான் இந்த இசை நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











