Saindhavi: நான் பாடினாலே என் பொண்ணுக்கு பிடிக்காது.. வேண்டாம்னு சொல்லுவா.. பிரபல பாடகி வருத்தம்!
சென்னை: முன்னணி இசையமைப்பாளராக ஏராளமான படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். தன்னுடைய 100வது படம் குறித்த அறிவிப்பை அவர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். ஜிவி பிரகாஷின் 100வது படமாக உருவாகவுள்ளது சிவகார்த்திகேயன் -சுதா கொங்கராக கூட்டணியில் அறிவிக்கப்பட்டுள்ள SK25 படம்.
இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கினாலும் அடுத்தடுத்து பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என மாஸ் காட்டி வருகிறார் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையிலான 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஆயினும் இவர்கள் இருவரும் இணைந்து துபாயில் இசை நிகழ்ச்சியில் பாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருபவர் ஜிவி பிரகாஷ். முன்னணி நடிகர்களுடன் பயணித்துவரும் இவர் தற்போது 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது 100வது படமாக சிவகார்த்திகேயன் -சுதா கொங்கரா கூட்டணியில் SK25 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பை நேற்றைய தினம் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார் ஜிவி பிரகாஷ்குமார். இதுகுறித்து தன்னுடைய பேட்டிகளிலும் அவர் பேசியிருந்தார். இந்தப் படத்தின் சிறப்பான பிரமோ முன்னதாக திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது நேரிடையாக சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் -சைந்தவி பிரிவு முடிவு: ஜிவி பிரகாஷுக்கு இது சோதனையான காலகட்டம் என்று கூறலாம். சமீபத்தில் சைந்தவியை பிரியும் முடிவை இவர் வெளியிட்டிருந்தார். பள்ளி காலத்திலிருந்தே இவர்களின் காதல் வளர்ந்துவந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ள நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறவு இவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை எடுத்துள்ளனர். இருந்தபோதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடல்கள் பாடியது ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
சைந்தவி கோபம்: குறிப்பாக இருவரும் இணைந்து மயக்கம் என்ன படத்தின் பிறைதேடும் இரவிலே பாடலை பாடியது ரசிகர்களை உருக்கியது. இந்த நிகழ்வின்போது ரிகர்சலில் இருந்த ஜிவி பிரகாஷிடம் செல்லும்படி தன்னுடைய மகள் அன்வியை சைந்தவி அனுப்பியதும் ரசிகர்களை கவர்ந்தது., இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனிடையே அடுத்தடுத்த பேட்டிகளை சைந்தவி கொடுத்து வருகிறார். அதில் தன்னுடைய இந்த முடிவு குறித்து பல்வேறு கேள்விகளை தான் எதிர்கொள்வதாகவும் இந்த கேள்விகள் தன்னை அதிகமாக கோபப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
மகளுக்கு பாடினால் பிடிக்காது: இதனிடையே தன்னுடைய மகள் அன்விக்கு தான் பாடினால் பிடிக்காது என்று சைந்தவி கூறியுள்ளார். தன்னுடைய சிறு வயதிலிருந்தே தன்னுடைய உறவுக்கார குழந்தைகளை எல்லாம் பாடி தூங்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ள சைந்தவி, ஆனால் தன்னுடைய மகளை தான் அப்படி செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால் தான் பாடத் துவங்கினாலே தன்னுடைய மகள் வேண்டாம் என்று கூறுவதாகவும் சைந்தவி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











