அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் பிரபல பாடகர்.. எல்லாம் பிக்பாஸுக்கு பிறகுதான்!
சென்னை: பிரபல பாடகரான வேல்முருகன் தன்னால் பல்வேறு விதமான கதாப்பாத்திரங்களை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன். இவரது குரலில் பல்வேறு ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன.
தந்போது நடிப்பிலும் தடம் பதிக்க முயற்சி செய்து வருகிளார் வேல்முருகன். வேல் முருகன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு
இதன் மூலம் பெரும் பிரபலமானார் வேல்முருகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்ததால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானார் வேல் முருகன். வேல் முருகன் கவுண்டமணியின் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அரை டஜன் படங்களுக்கு மேல்
சில பாடல் காட்சிகளிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு நடிகராக அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள வேல்முருகன், "நான் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, படைப்பாளன் , சலூன் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நான்கு படங்களில் நடிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தாய் மாமாவாக நடிக்கிறேன்
மேலும் இந்தப் படங்களில் தனது பாத்திரங்களும் கணிசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் வேல்முருகன். மேலும் அவர் பேசியிருப்பதாவது, "பிரஜின் ஹீரோவாக நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி படத்தில் நான் கதாநாயகியின் தாய் மாமாவாக நடிக்கிறேன், மற்றொரு படத்தில் நான் ஹீரோவின் மாமாவாக இருக்கிறேன்.

மேடை நாடகங்களில் நடித்துள்ளதால்
சலூன் படத்தில், நான் யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவாவுடன் நடிக்கிறேன். மேலும் படைப்பாளன் படத்தில் ஒரு வழக்கறிஞராக நடிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் பாடகர் வேல்முருகன் குழந்தை பருவத்திலிருந்தே மேடையில் நடித்து பாடியதால் அவருக்கு இயல்பாக நடிப்பு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

500க்கும் மேற்பட்ட பாடல்கள்
நான் முன்பே நடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்று பலர் தன்னிடம் கூறுவதாகவும் கூறியுள்ளார் வேல்முருகன். மேலும் பேசிய அவர் தற்போது மக்களிடம் வீடியோ மோகம் அதிகமாக உள்ளது. உங்கள் முகம் அவர்களுக்குத் தெரிய வேண்டியது அவசியமாகிவிட்டது. பிக் பாஸ் தமிழில் பங்கேற்பதற்கு முன்பு நான் 500 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளேன்.

பல வெற்றி பாடல்கள்
சுப்பிரமணியபுரம் முதல் நாடோடிகள், ஆடுகளம், ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை மற்றும் அசுரன் வரை, நான் பல வெற்றி படங்களில் வெற்றிப் பாடல்களைப் பாடினேன், ஆனால் பாடலின் புகழ் குறைந்தவுடன் மக்கள் என்னை மறந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்ற பிறகு, மக்கள் என்னை என் முகத்தால் அடையாளம் காணத் தொடங்கி விட்டனர்.
Recommended Video

காட்சி ஊடகத்தில் இருப்பது முக்கியம்
என்னை சந்திக்கும் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள், வேணாம் மச்சான் மற்றும் ஒத்த சொல்லால போன்ற பாடல்களுக்கு பின்னால் இருக்கும் குரல் என்னுடையதுததான் என்று அவர்களுக்கு தெரியாது. காட்சி ஊடகத்தில் இருப்பது முக்கியம் என்பதை இது எனக்கு உணர்த்தியது.

நடிப்பிலும் மாறுபாடுகள்
"பாடல்களில் கூட, நான் மாறுபாடுகளை கொடுக்க முயற்சித்தேன். கருப்பு நிறத்தழகி பாடல் ஒரு கொஞ்சும் கிளி பாட வெச்சான் பாடல் வித்தியாசமாக இருக்கும். எனவே, நான் குரலில் எனது பன்முகத்தன்மையை எவ்வாறு வெளிப்படுத்துகிறேனோ, அதுபோல, ஒரு நடிகராகவும் மாறுபட்ட பாத்திரங்களை என்னால் செய்ய முடியும் என்பதைக் காட்ட விரும்புகிறேன் என கூறியுள்ளார் பாடகர் வேல் முருகன்.


Click it and Unblock the Notifications











