twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்பா.. பிரியங்கா மோகன் எவ்வளவு அழகா இருக்காங்க.. டாக்டர் படத்தின் ’சோ பேபி’ பாடல் வீடியோ ரிலீஸ்!

    |

    சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் 'சோ பேபி' பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    நேற்றே இந்த பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், புனித் ராஜ்குமார் திடீர் மறைவால் ரிலீஸை தள்ளி வைப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்து இருந்தார்.

    அனிருத் இசையில் அட்டகாசமாக வெளியான சோ பேபி பாடலின் வீடியோ பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளன.

    தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் 'டாக்டர்' படம்? எந்த சேனல்னு பாருங்க.. தீயாய் பரவும் தகவல்! தீபாவளிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் 'டாக்டர்' படம்? எந்த சேனல்னு பாருங்க.. தீயாய் பரவும் தகவல்!

    வசூல் டாக்டர்

    வசூல் டாக்டர்

    சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

    தீபாவளிக்கு டிவியில்

    தீபாவளிக்கு டிவியில்

    சன் டிவியில் வரும் தீபாவளிக்கு டாக்டர் திரைப்படம் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. நவம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒடிடி ரிலீசாக சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாகி மக்களின் இல்லங்களை சிரிப்பொலியில் ஆழ்த்த உள்ளது.

    11 மில்லியன் வியூஸ்

    11 மில்லியன் வியூஸ்

    டாக்டர் படம் முடிந்த பிறகு திரையில் காண்பிக்கப்பட்ட செல்லம்மா செல்லம்மா பாடல் வீடியோ பாடல் ஒரு வாரத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட்டு 11.4 மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட்டாகி உள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சோ பேபி பாடலும் தற்போது வெளியாகி உள்ளது.

    சோ பேபி வீடியோ பாடல்

    சோ பேபி வீடியோ பாடல்

    அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் செய்த கசகசா காமெடியுடன் மார்ச் மாதம் வெளியான சோ பேபி லிரிக் வீடியோ வேற லெவலில் வைரலான நிலையில், அந்த பாடலின் வீடியோ பாடலை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் டாக்டர் சக்கைப் போடு போட்டுள்ள நிலையில், இரு மொழிகளிலும் சோ பேபி வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

    ப்பா என்ன அழகு

    ப்பா என்ன அழகு

    "அவள் முகம் பார்த்து" என வருண் டாக்டர் பாட ஆரம்பிக்க அதே நேரத்தில் ஏகப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களும் பிரியங்கா மோகனின் அழகை சோ பேபி பாடலில் கண்டு ரசித்துள்ளனர். படம் முழுக்க இந்த பாடல் மற்றும் செல்லம்மா பாடலில் மட்டும் தான் பிரியங்கா மோகன் ஹீரோயினாகவே நடித்திருப்பார். மற்றபடி அவரும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவே நடித்து கண்ணில் அடிவாங்கி அசத்தி இருப்பார்.

    சூர்யாவுக்கு ஜோடி

    சூர்யாவுக்கு ஜோடி

    இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் பிரியங்கா மோகன் தான் ஹீரோயின். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா மோகன் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    மீண்டும் சிவகார்த்திகேயனுடன்

    மீண்டும் சிவகார்த்திகேயனுடன்

    சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் மட்டுமல்ல மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்திலும் இவர் தான் ஜோடியாக நடித்து வருகிறார். டாக்டர் படத்தில் மிஸ்சான ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் டான் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sivakarthikeyan’s Doctor movie So Baby video song out now. Fans rejoice after watching Sivakarthikeyan and Priyanka Mohan performance in this song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X