நீண்டதூரம் போன போதும் நீங்குமா காதலே.. அமரன் 2வது சிங்கிள் ரிலீஸ்.. காதலை பொழிந்த ஜி.வி. பிரகாஷ்!

சென்னை: அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று எல்ஐகே படத்தில் இருந்து "தீமா தீமா" பாடல் வெளியாகி காதலர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது. அந்த பாடலை மூச்சு விடாமலும் பாடி அசத்தியுள்ளார் அனிருத். பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டிக்கு பதிலாக தனுஷ் மற்றும் நித்யா மேனன் அந்த பாடலில் நடித்திருந்தால் வேறலெவலில் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் இருந்து 2வது சிங்கிளை இறக்கி ஜி.வி. பிரகாஷ் மீண்டும் தனது காதல் ரசத்தை பொழிந்துள்ளார். "நீண்டதூரம் போன போதும் நீங்குமா காதலே" என வரிகள் அமைத்து ராணுவ வீரனுக்கும் அவனது மனைவிக்கும் இடையேயான காதலை சொல்லியிருக்கும் அழகே தனி அழகு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

sivakarthikeyan amaran

இந்த ஆண்டு தீபாவளிக்கு தியேட்டர்களில் சரவெடியாக விஜய்யிடம் துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயன் வெடிக்கப் போவது உறுதியாகியுள்ளது.

கமல்ஹாசன் தயாரிப்பு: உலக நாயகன் கமல்ஹாசன் இளம் நடிகர்களின் படங்களை தயாரிக்க முன் வந்து சிம்பு, சிவகார்த்திகேயன் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், சிம்புவின் படம் பெரிய பட்ஜெட் என்பதால் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்த நிலையில், வரும் தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

பிக் பாஸ் இயக்குநர்: கமல்ஹாசனை வைத்து முதல் 5 சீசன்கள் பிக் பாஸ் ஷோவை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியை வைத்து படம் பண்ணலாம் என நினைத்த கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், சாய் பல்லவியை வைத்து ஒரு ரியல் ஸ்டோரியை படமாக்க அனைத்து வசதிகளையும் ராஜ்குமார் பெரியசாமிக்கு செய்துக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவுக்கு சில பிரத்யேக ராணுவ இடங்களில் அமரன் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளது.

2வது சிங்கிள் ரிலீஸ்: அமரன் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக வெளியான "ஹே மின்னலே" பாடல் 9 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், 2வது பாடலாக "வெண்ணிலவு சாரல்" பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, குழந்தை நட்சத்திரம் என குடும்ப பாடலாகவும் ராணுவ வீரன் தனது காதல் மனைவியை பிரிந்து பாடும் பாடலாகவும் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் உருவாக்கியுள்ளார்.

தீபாவளி வின்னர்: வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வெளியாக உள்ளது. ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படங்கள் அதே தேதியில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு அமரன் படத்தின் மீதுதான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X