செப்.18-ல் 'கத்தி' இசை வெளியீடு... டுவிட்டரில் செளந்தர்யா ரஜினி அறிவிப்பு
சென்னை: இம்மாதம் 18ம் தேதி கத்தி படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் படம் 'கத்தி'. இப்படத்தின் இசையை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஈராஸ் நிறுவனம்.
இந்நிலையில், ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த், 'கத்தி' படத்தின் இசை இம்மாதம் 18-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கத்தி...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கத்தி படத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிக விலைக்கு...
கடும் போட்டிகளுக்கு மத்தியில் இப்படத்தின் இசையை இந்தியில் முன்னணி நிறுவனமான ஈராஸ் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இசை நிறுவனம்...
முன்னதாக 'மாற்றான்', 'கோச்சடையான்' போன்ற படங்களை விநியோகம் மட்டுமே செய்து வந்த ஈராஸ் நிறுவனம், 'கத்தி' இசையின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் இசை நிறுவனமாகவும் கால் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுப்படமும்...
'கத்தி' படத்தின் இசையை மட்டுமன்றி, மொத்த படத்தினையுமே ஈராஸ் நிறுவனம் மூலமாகவே வெளியிட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











