For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எஸ்.பி.பியும் ஏ.ஆர். ரஹ்மானும்.. எவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்கள் தந்துருக்காங்க தெரியுமா?

  |

  சென்னை: இளையராஜாவும் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் இணைந்து 70ஸ் கிட்ஸ் 80ஸ் கிட்ஸுக்கு பாட்டு கொடுத்ததை போல, எஸ்.பி.பியும் ஏ.ஆர். ரஹ்மானும் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸுக்கு கொடுத்த ரம்மியமான பாடல்களை ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

  இளையராஜா தெலுங்கில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தேசிய விருது பெற்றுத் தந்த நிலையில், தமிழில் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கத் தாமரை மகளே பாடல் தான் தேசிய விருதை மறைந்த இசை அரசர் எஸ்.பி.பிக்கு பெற்றுத் தந்தது.

  ரஹ்மானின் இசையும், பாலுவின் குரலும் இணைந்து நம்மை பரவசப்படுத்திய இன்னும் பல காலம் பரவசப்படுத்தும் சில பாடல்களை தொகுப்பை இங்கே காண்போம்.

  போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே.. நெஞ்சை பிழியும் எஸ்பிபியின் டாப் 10 சோகப் பாடல்கள்!போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே.. நெஞ்சை பிழியும் எஸ்பிபியின் டாப் 10 சோகப் பாடல்கள்!

  காதல் ரோஜாவே

  "காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி கண்ணே" இந்த பாடலை பாடாத தமிழ் சினிமா ரசிகர்களே இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ரோஜா படத்தில் தான் இளம் இசையமைப்பாளராக ரஹ்மான் அறிமுகம் ஆகிறார். அவரது இனிமையான இசையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தேவ கான குரல் கலந்து ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளதை என்றுமே மறக்க முடியாது.

  தங்க தாமரை மகளே

  சிறு வயதில் இந்த பாடலையே வீட்டில் பல பெற்றோர்கள் பார்க்க மட்டும் அல்ல கேட்கவும் விட மாட்டார்கள் அந்த அளவுக்கு பாடல் காட்சிகளை தாண்டி எஸ்.பி.பியின் குரலில் காமம் சொட்டும் "நகம் கடிக்கும் பெண்ணே நடக்காத ஆசை.. நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை.. இறுக்கமே காதல் பாஷை" என அவர் பாடிய பாடலுக்கு இந்தாங்க தேசிய விருதை புடிங்க என தூக்கி கொடுத்தது எல்லாம் வரலாறு பாஸ்.

  காதலெனும் தேர்வெழுதி

  இயக்குநர் கதிர் இயக்கத்தில் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் 1999ம் ஆண்டு வெளியான காதலர் தினம் படத்தில் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ரஹ்மானும் எஸ்.பி.பியும் இணைந்த "காதலெனும் தேர்வெழுதி.. காத்திருந்த மாணவன் நான்" பாடல் எவர் க்ரீன் ஹிட்.

  ஒருவன் ஒருவன் முதலாளி

  இளையராஜா இசையில் ரஜினிக்கு காதலின் தீபம் ஒன்று பாடல் உள்ளிட்ட ஏகப்பட்ட பாடலை பாடிக் கொடுத்த பாலு சார், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முத்து படத்தில் கூஸ் பம்ப்ஸ் கிளப்பும் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடல் எல்லாம் மாஸ்டர் பீஸ். அதிலும், "மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை.. மண் தான் கடைசியில் ஜெய்க்கிறது" என்ற வரிகளை மெய்பிக்கும் விதமாக அவரது பூத உடல் சந்தன பேழைக்குள் அடைபடாமல், இந்த மண்ணுக்கே சொந்தமானது.

  காற்றில் ஓர் வார்த்தை

  கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் மூன்று வேடத்தில் நடித்து அசத்திய வரலாறு படத்தில் இடம்பெற்ற "காற்றில் ஓர் வார்த்தை" பாடலை அப்படியே அஜித்துக்கு ஏற்ற மாதிரி பாடி அசத்தி இருப்பார். "சுற்றி என்னை துரத்தும் துயரம் அடி... உன் நெற்றிப் பொட்டுக்கடியில் என்னை வைத்துக் கொள்ளடி" என்ற வரிகள் எல்லாம் எஸ்.பி.பியின் மாயக் குரலில் எப்போதுமே கேட்டு ரசிக்கலாம். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என ஏகப்பட்ட பாடல்களை அஜித்துக்காக எஸ்.பி.பி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  SPB and AR Rahman done a lot of magic in their songs. The list of SPB and ARR combo massive hit among 90s kids.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X