மூச்சு விடாமல் எஸ்.பி.பி தெலுங்கில் பாடி கேட்டு இருக்கீங்களா? மோகன்லால் ஷேர் செய்த வீடியோ!

திருவனந்தபுரம்: மறைந்தாலும் அனைவர் மனதிலும் மறையாமல் உள்ளுக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்போதும் நம் நினைவுகளில் கலந்து இருக்கிறார்.

"மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என வெறும் எதுகை மோனைக்காக பாடவில்லை. உண்மையிலேயே இசையாக தான் நாளும் இசை ரசிகர்களின் செவிகளில் இன்பத் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

அவரது மறைவை இன்னமும் நம்ப முடியாமல் தான் பலரும் உள்ளனர். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் முதலாம் நினைவு ஆண்டை முன்னிட்டு மூச்சு விடாமல் எஸ்.பி.பி தெலுங்கில் பாடிய பாடல் வீடியோவை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஒரு வருஷம் ஆகிடுச்சு

ஒரு வருஷம் ஆகிடுச்சு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என்பதை நம்ப மனம் இன்னமும் மறுக்கத்தான் செய்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவரது நினைவுகளில் மூழ்கி திளைத்து வருகின்றனர்.

டிரெண்டிங்கில் எஸ்.பி.பி

#SPBalasubrahmanyam எனும் ஹாஷ்டேக் காலை முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இன்றைய தினத்தில் நினைத்து அவரது இழப்பை எண்ணி வருந்தி வருகின்றனர். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அரிய புகைப்படங்கள் மற்றும் பாடல்கள் அதிகளவில் இந்த ஹாஷ்டேக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உருகும் மோகன்லால்

உருகும் மோகன்லால்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, இந்தியாவின் எண்ணற்ற மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் எஸ்.பி.பியை நினைத்து உருகி மோகன்லால் போட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

மூச்சு விடாமல் தெலுங்கில்

"மண்ணில் இந்த காதலன்றி" பாடலில் மூச்சு விடாமல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் "முத்து மணி ரத்தினங்களில்" என ஆரம்பித்து பாடியதை பார்த்து பல முறை ரசித்து இருப்போம். அதே பாடலை தெலுங்கு மொழியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மொபைல் வீடியோவில் பாடி இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார் மோகன்லால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X