துபாய் மக்களை இசை மழையில் நனைய வைத்த எஸ்.பி.பி.
துபாய்: ரிதம் இவென்ட்ஸின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி துபாய் இந்திய பள்ளியில் நடைபெற்றது.
துபாய் ரிதம் இவென்ட்ஸ் ஏற்பாடு செய்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி துபாயில் உள்ள இந்திய பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
அரங்கில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது. சுமார் நான்கரை மணி நேரம் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை மழையில் நனைந்தனர். எஸ்.பி.பியுடன் மௌன ராகம் முரளி இசைக்குழுவினர் பாடல்கள் பாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிதம் இவென்ட்ஸின் திருமதி. சந்திரா ரவி மற்றும் திரு. சபேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்போம்...

அரங்கிற்கு வரும் எஸ்.பி.பி.
நிகழ்ச்சி அரங்கிற்கு எஸ்.பி.பி.யை அழைத்து வரும் ஏற்பாட்டாளர்கள்.

குத்துவிளக்கேற்றுதல்
குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டபோது எடுத்த படம்.

பூங்கொத்தை பெற்றுக்கொண்டு பேசும் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி.க்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

எஸ்.பி.பி.யுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
எஸ்.பி.பியுடன் பேசி மகிழும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

இனிய குரலில் அசத்தும் எஸ்.பி.பி.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாட அரங்கில் இருந்த அனைவரும் மெய்மறந்து போய் உட்கார்ந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications