twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மிஸ்டர்.சந்திரமௌலி' - டைட்டில் உருவானது எப்படி? - ரகசியம் சொன்ன தனஞ்செயன்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், படத்திற்கு 'மிஸ்டர்.சந்திரமௌலி' என்கிற டைட்டில் எப்படி உருவானது என்கிற காரணத்தைக் கூறினார். "வேறொரு டைட்டில் வைத்திருந்த நிலையில் இயக்குநர் திரு, சுசீந்திரனிடம் கதையைச் சொன்னதும், அவர் 'மிஸ்டர் சந்திரமௌலி'னு வைக்கலாமே என ஐடியா கொடுத்திருக்கிறார்.

    Story behind Mr Chandramouli title

    திரு இந்த விஷயத்தை என்னிடம் சொன்னதும், இது நல்லாருக்கேன்னு அதையே டைட்டிலா வெச்சுட்டோம். சுசீந்திரன் சாருக்கு எங்களது நன்றி" என படத்தின் டைட்டில் உருவான கதையைக் கூறினார் தனஞ்செயன்.

    அடுத்து பேசிய இயக்குநர் சுசீந்திரன் கௌதம் கார்த்திக்குக்கு இந்தப் படம் நல்ல பிரேக் கொடுக்கும் எனக் கூறினார். "விஷால் சார் எத்தனை படத்தில் நடிச்சிருந்தாலும் அவருக்கு பெர்ஃபார்மர்ங்கிற பெயர வாங்கித்தந்தது 'பாண்டியநாடு' திரைப்படம்.

    ஆர்யா சாருக்கு 'நான் கடவுள்', சூர்யா சாருக்கு 'ஃப்ரெண்ட்ஸ்' படம், அந்த மாதிரி கௌதம் கார்த்திக்குக்கு இந்தப் படம் நிச்சயம் அமையும். ஏன்னா படத்தில் கடைசி 20 நிமிஷம் அவரோட கேரக்டரைசேஷனை அப்படி டிசைன் பண்ணிருக்கார் திரு. கௌதம் கார்த்திக்குக்கு இது ரொம்ப முக்கியமான படம்.

    திருவுக்கு 'நான் சிகப்பு மனிதன்' படத்துக்கு அப்புறம் பெரிய கேப்புக்கு பிறகு உருவாகியிருக்கு இந்தப் படம். கண்டிப்பா இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் ஆகும். இந்தப் படத்தின் ஒரு பாட்டுல கிளாமர் காட்சிகள் அதிகமா இருக்கு. சென்சார் போய் முழுசா காட்சிகள் வருமான்னு தெரியலை" எனக் கூறினார்.

    English summary
    Producer Dhananjeyan told that how they got the title 'Mr.Chandramouli'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X