2 மில்லியனை வியூசை கடந்த அண்ணாத்தயின் வா சாமி பாடல்... இமான் மகிழ்ச்சிப் பதிவு!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.

இந்தப் படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு படத்தில் 4வது பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் வா சாமி என்ற அந்தப் பாடல் தற்போது 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதை படத்தின் இசையமைப்பாளர் டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான வீரம், விசுவாசம் படங்களை போலவே அண்ணாத்த படமும் குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

டி இமான் இசை

டி இமான் இசை

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வெற்றி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அவரது இசையமைப்பில் இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறப்பான டீசர்

சிறப்பான டீசர்

படத்தின் டீசரும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அண்ணன் -தங்கை பாசம் பிரதானமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தின் அண்ணாத்த அண்ணாத்த, சாரல் காற்றே, மருதாணி, வா சாமி ஆகிய பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

சிறப்பான வா சாமி பாடல்

சிறப்பான வா சாமி பாடல்

இதில் குறிப்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வா சாமி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அருண்பாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை முகேஷ் முகமது, கீழக்கரை சம்சுதீன், நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக இது அமைந்துள்ளது.

2 மில்லியன் பார்வைகள்

2 மில்லியன் பார்வைகள்

இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் டி இமான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் கடவுளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாடலின் லிங்கையும் ஷேர் செய்துள்ளார். அவரது அதிரடி இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் குறிப்பாக அண்ணாத்த பாடலும் சிறப்பாக அமைந்துள்ளது.

Recommended Video

இன்னொரு படையப்பா எதிர்பாக்கலாம் | Annaatthe | PRO Riyaz Ahmed Excluisve interview | Filmibeat Tamil
தாதாசாகேப் பால்கே விருது

தாதாசாகேப் பால்கே விருது

தீபாவளி ரிலீசாக அண்ணாத்த படம் வெளியாகவுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் ரஜினிகாந்த் திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளது குறித்தும் அவர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X