குட் பேட் அக்லி ஃபீவர் ஓவர்.. இனி ரெட்ரோ தான்.. அடுத்த பாடலை தரமா இறக்கும் சந்தோஷ் நாராயணன்!

சென்னை: தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் ஒரு மாதத்திற்கு எப்படியாவது ஒரு மாஸ் ஹீரோவின் படம் ரிலீஸ் ஆகி விடுகிறது. கடந்த மாதம் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் பாகம் 2, இந்த மாதம் அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்த மாதம் சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் பணிகளை மெல்ல மெல்ல செய்து வருகிறது படக்குழு. அதன் அடிப்படையில் படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிடவுள்ளது.

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கவும் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யாவும் சந்தோஷ் நாராயணனும் இணையும் முதல் படம். அதேபோல் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான். இது சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Suriya Karthik Subbaraj Retro Movie 3rd Single The One Song Will Release Today Evning 5 PM

படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் படக்குழு சார்பில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாடல்களிலும் சூர்யா இரண்டு கெட்டப்களில் உள்ளார். அதாவது கண்ணாடிப் பூவே பாடலில் பெரிய மீசை வைத்துக் கொண்டு உள்ளார். அதேபோல், கனிமா பாடலில் மீசை தாடி இல்லாமல் உள்ளார்.

Suriya Karthik Subbaraj Retro Movie 3rd Single The One Song Will Release Today Evning 5 PM

ரெட்ரோ: இரண்டு பாடல்களுமே இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கனிமா பாடல், தமிழ் ரசிகர்களை கடந்து மற்ற மொழி ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. கனிமா பாடலை ரிலீஸ் செய்வதற்கு முன்னர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நடன வீடியோவைப் பகிர்ந்து அலப்பறை செய்திருந்தார். ஆனால் பாடல் வெளியான பின்னர் தான் தெரிந்தது. அந்த பாடலின் மொத்த நடன அசைவுகள் புது விதமாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது என்று.

மூன்றாவது பாடல்: அதேபோலவே, படத்தில் இருந்து மூன்றாவது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்தது மட்டும் இல்லாமல், இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியும் உள்ளார். மேலும், இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மூன்றாவது பாடலை ரிலீஸ் செய்வது தொடர்பாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Suriya Karthik Subbaraj Retro Movie 3rd Single The One Song Will Release Today Evning 5 PM

தி ஒன்: அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் விளக்குகிறார். அதன் பின்னர் அந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடுகிறார். தி ஒன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து சித் ஸ்ரீராம் மற்றும் ஷான் ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்கள். இந்த பாடல் இன்று அதாவது, ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மொத்த திரையுலகமும் குட் பேட் அக்லி ஃபீவரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கும் போது, ரெட்ரோ படத்தின் புரோமோசன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. படம் மே மாதம் முதல் தேதியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

மூன்றாவது பாடல்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை வரும் மே மாதம் முதல் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது படத்தின் இரண்டாவது பாடலான, கனிமா பாடல் கடந்த மார்ச் 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது பாடல் இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது.

வரவேற்பு: ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து, டீசர், முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் கனிமா பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தபோது, சந்தோஷ் நாராயணன் அலப்பறை செய்தார். கனிமா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. கனிமா பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியும் உள்ளார். பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருப்பதால், பலரும் பாடல் வரிகளைப் பாராட்டி வருகிறார்கள். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

பாடல்கள் ஹிட்: ஏற்கனவே கண்ணாடி பூவே பாடல் எப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோ, அதைவிட அதிகமாகவே கனிமா பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலின் ப்ரோமோவுக்கு சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்டுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், யோவ் இத்தனை நாளா எங்கயா இருந்த? அசத்தீட்டிங்க போங்க. சந்தோஷ் நாராயணன் ஜி, யூ ஆர் அப்பாய்ண்டேட்" என பதிவிட்டார்.

அலப்பறை: அந்த வீடியோவில் கார்த்திக் சுப்பராஜை டேக் செய்த, சந்தோஷ் நாராயணன் அதற்கு, " கார்த்திக் சுப்புராஜ் சார் உங்களுக்கு இந்த நடனம் பிடிக்கும் என நினைக்கிறேன் சார். இந்த நடன வீடியோவை பாதுகாப்பு காரணங்களுக்காக யாரிடமும் பகிர வேண்டாம். எனது நடனம் எப்படி உள்ளது என கூறுங்கள் சார்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த சூர்யா, கனிமா பாடல் முழுவதும் நான் உங்களை மட்டும்தான் ஜூம் செய்து ஃபாலோ செய்தேன் என கமெண்ட் போட்டார். இந்நிலையில் மூன்றாவது பாடல் இன்று வெளியாவதால் ரசிகர்கள் பாடலை இணையத்தில் டிரெண்ட் செய்ய காத்துக் கொண்டு உள்ளார்கள்.

புரோமோசன்: சூர்யாவுக்கு இந்த படம் கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள். சூர்யாவும் அதே நம்பிக்கையில் உள்ளார். அடுத்த வார இறுதியில் இருந்து படத்தின் புரோமோசன் வேலைகளில் சூர்யா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X