Box Office: 300 கோடி கருப்பு.. 200 கோடி த்ரிஷ்யம் 3.. வசூலில் மாஸ் காட்டும் தென்னிந்திய படங்கள்!

சென்னை: பாலிவுட் படமான துரந்தர் 2 இந்த ஆண்டு 1800 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. புஷ்பா 2 படத்தின் ரெக்கார்டை துரந்தர் 2 முறியடித்துள்ளதாக கூறுகின்றனர்.

டோலிவுட்டில் இந்த ஆண்டு சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் மட்டுமே 300 கோடி வசூலை கடந்திருந்தது.

Suriya s Karuppu Movie joins 300 Crore Club and Mohanlal s Drishyam 3 joins 200 Crore Club

தமிழ் சினிமாவில் பராசக்தி, தாய் கிழவி, யூத் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் குறைவான வசூலையே ஈட்டின. இந்நிலையில், சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கடந்த வாரம் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக மோகன்லால் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

300 கோடி கருப்பு: இந்த ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கோலிவுட்டுக்கு ஒரு மெகா பிளாக்பஸ்டர் படம் கூட வரவில்லையே என ரசிகர்கள் முதல் சினிமா துறையினர் வரை பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நிலையில், கருப்பசாமியாக வந்து சூர்யா காப்பாற்றியுள்ளார். சுதா கொங்கராவின் புறநானூறு படத்தை தவிர்த்த நிலையில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்தே 300 கோடி வசூலை சாத்தியப்படுத்தியுள்ளார் சூர்யா.

200 கோடி த்ரிஷ்யம் 3: சூர்யாவின் கருப்பு திரைப்படம் கோலிவுட்டுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை கொடுத்த நிலையில், மோகன்லாலின் த்ரிஷ்யம் மலையாள சினிமாவுக்கு மாஸ் வெற்றியை த்ரிஷ்யம் 3 படத்தின் மூலம் கொடுத்துள்ளது. த்ரிஷ்யம் முதல் மற்றும் 2ம் பாகம் என 2 படங்களும் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை கடந்த நிலையில், 3வது பாகம் 7 நாட்களில் அடிபொலியாக 200 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளது என மோகன்லால் தற்போது ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லோகா சாதனை: மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான், தொடரும் உள்ளிட்ட படங்கள் 250 கோடி வசூல் சாதனையை செய்துள்ளன. ஹிருதயப்பூர்வம் திரைப்படம் 100 கோடியுடன் நிற்க, அதற்கு போட்டியாக வெளியான கல்யாணி பிரியதர்ஷனின் லோகா திரைப்படம் 300 கோடி வசூல் செய்து மலையாள திரையுலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் படமாக உள்ளது. இதே வேகத்தில் த்ரிஷ்யம் 3 இன்னும் ஒரு வாரம் தியேட்டர்களில் ஓடினால் கண்டிப்பாக லோகா வசூல் சாதனையை முறியடிக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X