விரைவில் கார்த்தியும் நானும் சேர்ந்து நடிப்போம்: சூர்யா

விரைவில் கார்த்தியுடன் சேர்ந்து படம் செய்வேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Recommended Video

கூடிய விரைவில் சூர்யா - கார்த்தி ஒரே படத்தில்- வீடியோ

சென்னை: தம்பி கார்த்தியின் ஆசைப்படி விரைவில் அவருடன் சேர்ந்து திரைப்படத்தில் நடிப்பேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் " கடைக்குட்டி சிங்கம் ". கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை, 'பசங்க' பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் உள்பட ஒரு நட்சத திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

Surya and Karthi to do a movie together soon

" கடைக்குட்டி சிங்கம் " படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக மேடை ஏறி பேசினர். அப்போது, அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தமது ஆசையை கார்த்தி வெளிப்படுத்தினார். இதையடுத்து பேசிய சூர்யா, தம்பியின் ஆசை விரைவில் நிறைவேறும் என்றார்.

விழாவில் சூர்யா பேசியதாவது, "கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்.

Surya and Karthi to do a movie together soon

எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக வந்துள்ளது.

நானும் கார்த்தியும் குழந்தையாக இருக்கும் போது சத்யராஜ் மாமா, அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு"
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் , "இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யாராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தத்தை வேர்வையாக சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான்.

சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது" என நடிகர் சிவகுமார் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X