அதுல் குல்கர்னி நடிக்கும் சுழல் - இசை வெளியீடு!

ஆர் ஜெயக்குமார் இயக்கியுள்ள சுழல் படத்தில் பாரீஸ் என்ற இளைஞர் நாயகனாக அறிமுகமாகிறார். ரோஸின், சாரு, ஜோதி ஆகிய மூவரும் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் சிறு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் அதுல் குல்கர்னி. இவர், கமலின் ஹேராம் படத்தில் அறிமுகமாகி, லிங்குசாமியின் ரன் படத்தில் பரபர வில்லனாக அறியப்பட்டவர். அதன் பிறகு நிறையப் படங்கள் நடித்துவிட்டார். சின்ன இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையாக துப்பறியும் வேடத்தில் நடிக்கிறார்.
எல்வி கணேஷ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலைப்புலி எஸ் தாணு, பி எல் தேனப்பன், எடிட்டர் லெனின் ஆகியோர் பாடல்களை வெளியிட்டனர்.
இந்தப் படத்தின் இசைக்காக, 80 இசைக்கலைஞர்களை வைத்து லைவ்வாக வாத்தியக் கருவிகளை வாசிக்க வைத்து பதிவு செய்ததாக எல் வி கணேசன் குறிப்பிட்டார். அப்படி லைவ்வாக வாசித்த போதுதான் காட்சிகளுக்கு அதன் உண்மையான உணர்வைத் தர முடிந்ததாகவும் கூறினார்.
பரவாயில்லை... எப்படியோ தமிழ் சினிமா இசை கீபோர்ட்டை தாண்டிவிட்டதில் சந்தோஷமே!


Click it and Unblock the Notifications











