twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளம் இயக்குனர்கள் வயலன்ஸ் படங்களை தவிர்க்க வேண்டும்…பாரதிராஜா வேண்டுகோள்

    |

    சென்னை : இளம் இயக்குனர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்று 'தமிழரசன்' பட இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார்.

    எஸ்.என்.எஸ் மூவீஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். விஜய் ஆண்டனி கதாநாயாகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

    Tamizharasan audio launch

    விழாவில் பேசிய இயக்குனர் பாபு யோகஸ்வரன், இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணம் விஜய் ஆண்டனியும் தான். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    மேலும் ரோபோ சங்கர் பேசும்போது, இந்த வருடத்தின் இது கடைசி ஞாயிறு. அப்படியான ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கோவில் வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது சிறப்பு. இளையராஜா சார், நான் நடித்துள்ள படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது எனக்குப் பெரிய பெருமை.

    விஜய் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் நடிப்பில் அசத்தி விடுவார். மோகன்ராஜா மகனுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அவன் சிறப்பாக நடித்துள்ளான். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

    மேலும் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டணி, இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டராகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா தான். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குனர். அவர் பெரிய இயக்குனராக நிச்சயம் வருவார் என்றார்.

    Tamizharasan audio launch

    மேலும் விழாவில் பேசிய பாரதிராஜா, இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா என்றார். மேலும், விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேற மாதிரி இருக்கிறார் நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர் என்று பாராட்டினார்.

    இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்களை எடுங்கள் அப்போது தான் வளரும் தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும் என்று கூறிய பாரதி ராஜா, தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு, இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும் என்று வாழ்த்தினார்.

    இவ்விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    English summary
    Tamizharasan audio launch
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X