எங்களுக்கு வலிக்குமேனு கை கால் பிடிச்சி விட்டார் எஸ்பிபி.. தலைவாசல் விஜய் நெகிழ்ச்சி !

சென்னை : கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமான பாடகராக வலம் வந்து கொண்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என எக்கச்சக்கமான மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் திடீரென மரணம் அடைந்த நிலையில் இந்திய திரையுலகமே ஸ்தம்பித்து போய் நிற்கிறது. நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் எஸ்பிபி இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் நிலையில் தலைவாசல் திரைப்படத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பற்றி தலைவாசல் விஜய் பேசிய வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது.

சிகிச்சை பலனின்றி

சிகிச்சை பலனின்றி

சமீபகாலமாகவே கொரானாவின் கோரப்பிடியில் சிக்கி பல திரைப்பிரபலங்களை தொடர்ந்து திரையுலகம் இழந்து வருவதை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள நிலையில் சமீபத்தில் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறக்கமுடியாத நிகழ்வுகளையும்

மறக்கமுடியாத நிகழ்வுகளையும்

இந்த செய்தியை கேட்ட திரையுலகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள இவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அவருடன் இணைந்து பணியாற்றிய மறக்கமுடியாத நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

தலைவாசல் திரைப்படம்

தலைவாசல் திரைப்படம்

இந்நிலையில் நடிகர் தலைவாசல் விஜய் எஸ் பி பாலசுப்ரமணியம் உடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்ததைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தலைவாசல் திரைப்படத்தில் எஸ்பிபி-யுடன் நடந்த மறக்கமுடியாத நிகழ்வை நினைவு கூறியிருந்த நிலையில் இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இறந்து போவதாக

இறந்து போவதாக

நடிகர் அஜித்குமாரின் அறிமுக திரைப்படமான அமராவதி படத்தை இயக்கிய இயக்குனர் செல்வாவின் முதல் திரைப்படமான தலைவாசல் திரைப்படத்தில் நாசர், தலைவாசல் விஜய், எஸ் பி பாலசுப்ரமணியம், சிவரஞ்சனி, ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் எஸ்பிபி ஒரு காட்சியில் இறந்து போவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

கை, கால் பிடித்துவிட்டுள்ளார்

கை, கால் பிடித்துவிட்டுள்ளார்

அவ்வாறு இறந்துபோன எஸ்பிபி-யை தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் தூக்கிச் செல்கின்றவாறு காட்சி அமைக்கப்பட்டிருக்கும், பல கோணங்களில் பல டேக்குகள் உடன் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் அனைவரும் எஸ்பிபி தூக்கிக் கொண்டு நிற்க அதைப்பார்த்து எஸ்பிபி " நான் ரொம்ப குண்டா இருக்கேன் கண்டிப்பா உங்களுக்கு வெயிட்டா இருக்கும் உங்களோட கஷ்டம் எனக்கு புரியுது" என நெகிழ்ந்தவாறு கூறியும் ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையிலும் கீழே இறங்கும் பொழுதும் தலைவாசல் விஜய் உட்பட தன்னை தூக்கிய அனைவருக்கும் கை, கால், உடலை பிடித்துவிட்டுள்ளார். இவ்வாறு தலைவாசல் திரைப்படத்தில் எஸ்பிபி நடந்துகொண்ட விதத்தை நினைவு கூறி கூறியிருந்த தலைவாசல் விஜய்யின் அந்தப் பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X