மாஸ் அப்டேட்.. தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானாம்.. முதன்முறையாக இணையும் சூப்பர் காம்போ!
சென்னை: தளபதி விஜய்யின் 65வது படத்தில் இசையமைக்கப் போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நடிகர் விஜய், தனது அடுத்தப் படம் குறித்த முடிவுகளையும் உறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 4வது முறையாக விஜய் நடிக்க உள்ள அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போகிறதாம்.

துப்பாக்கி 2
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. கடந்த 2012ம் ஆண்டு ரிலீசான இந்த படத்தின் அடுத்த பாகத்தை மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப்போவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசையமைப்பாளர்
துப்பாக்கி படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் அதிர வைக்கும் தீம் மியூசிக் முதல் அத்தனை பாடல்களையும் சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்திருந்தார். படத்தின் கதையும், விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி, நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் பாடல் ஆல்டைம் ஃபேவரைட்.

முதன்முறையாக
துப்பாக்கி 2 படம் குறித்த தகவல்கள் வெளியானவுடன் மீண்டும் ஹாரிஷ் ஜெயராஜ் இசையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஆச்சர்யம் ஊட்டும் காம்போவாக விஜய் படத்திற்கு முதன்முதலாக இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் தமன் இசையில், துப்பாக்கி 2 உருவாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4வது முறை
துப்பாக்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படமும் மெகா ஹிட் ஆனது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மூன்றாவது முறையாக இணைந்த இந்த வெற்றிக் கூட்டணியின் முயற்சியில் உருவான சர்கார் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், 4வது முறையாக இணையும் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்தநாள்
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுன் முடிவுக்கு வந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். விஜய் பிறந்தநாளில் ட்விட்டரை தெறிக்கவிடவும் ரெடியாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











