இளையராஜா இசையில் முதல் முதலாக தாமரை!
இளையராஜாவின் இசையில் முதல் முறையாக பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கவிஞர் தாமரை.
கவுதம் மேனனின் கேம்பில் எப்போதும் தாமரைக்கு இடமுண்டு. அவரது முதல் படமான மின்னலே-யிலிருந்து பாடல் எழுதுகிறார் தாமரை.
இப்போது கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திலும் இந்த வாய்ப்பு தொடர்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இளையராஜா இசையில் தாமரை பாடல் எழுதுவது இதுவே முதல் முறை. ஏற்கெனவே இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா.
பெப்சி பிரச்சினையால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினை தீர்ந்ததும், இந்த கோடை விடுமுறையின் மறக்க முடியாத ஜில் ரொமான்டிக் படமாக வரவிருக்கிறது நீதானே என் பொன் வசந்தம்.
Comments


Click it and Unblock the Notifications
